Anaika

அனைகா – பலம் வாய்ந்தவள் | நிறைவானவள்

“இந்தியாவில் பிறந்தாலும் ஹாங் காங்கில் ஒரு பிரபல கட்டடக் கலை  அதிபரின் ஒரே மகளான நான் இந்தியாவுக்கு வந்திருந்த போது..  என் தோழியுடன்   மும்பையிலுள்ள ஒரு உயர்ந்த கட்டடத்தின் லிப்ஃடில் இயக்குநர் ராம் கோபால் வர்மாவை  சந்திக்க நேர்ந்தது. என்  தோழி அவர் தான் RGV  என அறிமுகபடுதியபோதுக் கூட எனக்கு அவரை தெரியவில்லை. பின்னர் என் தோழி மூலம் அவர்  படத்தில் என்னை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார் என்றதும் முதலில் தயங்கினாலும் பின்னர் ஒப்புக் கொண்டேன். அந்த முடிவுக்கு அவரது கதையும் அவருடைய மேக்கிங்  ஸ்டைலும் முக்கிய காரணம். லிப்ஃட் பயணம் என்னை இவ்வளவு தூரம் தூக்கி செல்லும் என்பதை நான் எதிர்பார்கவில்லை. அவர் இயக்கத்தில் அறிமுகமாகும் பாக்கியம் எனக்கு கிட்டியது  என்னால்  நம்பவே முடியவில்லை. இரு மொழிகளில் தயாராகும் ‘நான்தாண்டா’ திரைப் படம் என்னை நிச்சயம் பிரபலமாக்கும்” என்கிறார் அனைகா.

அனைகா என்றால் பலம் வாய்ந்தவள், நிறைவானவள் என்று அர்த்தமாம்.

Comments

comments