Search
Andrea-Simbhu-2

ஆண்ட்ரியாதான் சிம்புவுக்கு சரியான ஜோடி

விண்ணைத் தாண்டி வருவாயா‘ படத்தில் சிம்புவிடம் இங்க என்ன சொல்லுது என்ற கேள்வியைக்  கேட்டு பரபரப்பாகப்  பிரபலமானவர் கணேஷ். அந்தப் படத்தில் துவங்கிய இவர்களது நட்பு , இப்போது கணேஷ் தயாரிக்கும் ‘ இங்க என்ன சொல்லுது’  படம் வரை தொடர்ந்து, சிம்புவின் ஈடுப்பாட்டால் அந்தப் படத்தை பெரிய படமாக்கும் வரை நீடித்து  வருகிறது . இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையின் தேர்வு நடைபெற்று வந்தது . இதுவரை வந்திராத ஜோடியாக இருக்க வேண்டும் என்ற கணேஷின் எண்ணத்துக்கு ஏற்ப தேர்வு நடந்தது . இறுதியில் சிம்பு ஜோடியாக ஆண்ட்ரியா தேர்ந்து  எடுக்கப்பட்டார்.

இந்த ஜோடி தேர்வைப் பற்றி கணேஷ் கூறும் போது, “சிம்புவும் ஆண்ட்ரியாவும் மிகச் சரியான ஜோடி. என் கணிப்பில், என் பார்வையில் அவர்களது ஜோடி ஒரு உற்சாகமான ஜோடியாகவே தெரிகிறது. ரசிகர்களுக்கு இந்த ஜோடியை ரொம்பவே பிடிக்கும் . இந்தக் கதாபாத்திரமும் அவர்களுக்கெனவே படைத்தது போலவே பொருத்தமாக இருக்கிறது . படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்தது , இறுதிக்கட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது .இந்த மாத இறுதியில் படத்தை முடித்துப் பெரிய அளவில் வெளியிடத் திட்டமிட்டு  இருக்கிறேன்” என்கிறார் .




Leave a Reply