Kovai-01

இது நம்ம ஊருங்க!!

நம்ம ஊர். அது என்ன ஊர்? 

“கோயம்புத்தூர்.” 

கோயம்புத்தூரின் பெயர்க்காரணம் தெரியுமா உங்களுக்கு?

நம்ம கவியரசர் கண்ணதாசன் அவர்கள் சொல்லும் விளக்கத்தினைப் பாருங்களேன்.

கன்னியரின் இதழழகை கோவையென்பார்!

கனிமழலை முழுவடிவை கோவையென்பார்!

தேன்தமிழில் திருக்கோவை நூலொன் றுண்டு.
திறமான கவிதொகுத்த கோவை யுண்டு.

இந்நகரை “கோவை” என ஏனழைத்தார்?

எழில்கோயம் புத்தூர் என்றேன் படைத்தார்?

என்கருத்தை யான்சொல்வேன்! தமிழறிந்தோர்
இதுதவறென் றுரைத்தாலும் தவறே யாக!

வஞ்சியர்கள் விளையாடும் வஞ்சி நாட்டின்
மன்னருக்கு மக்களென இருவர் வந்தார்.

செஞ்சரத்து வில்லவனாய் வடபாற் சென்ற
செங்குட்டுவன் ஒருவன்.
தமிழெடுத்து
அஞ்சிலம்பை யாத்தணித்த இளங்கோ அண்ணல்
அடுத்தொருவன்.

இவ்விருவர் குறிப்பும் பார்த்து
பிஞ்சுமகன் அரசாவான் என்றுரைத்தான்
பேதையொரு வேதாந்தி.

அதனைக்கேட்டு
முன்னவனே நாடாள வேண்டுமென்று
முடிமாற்றி உடைமாற்றி இளங்கோ அண்ணல்
தன்னாட்டின் எல்லையிலோர் குடிலமைத்தான்.
தனியாக சாத்தனுடன் தங்கிவிட்டான்.

அந்நாளில் இளங்கோவன் அமைத்த புத்தூர்
அங்கோவன் புத்தூராய்ப் பேரெடுத்து
இந்நாளில் கோயம் புத்தூ ராயிற்று..!

இயல்பான உருமாற்றம் சரிதச் சான்று!

நீலமலைச் சாரலிலே நிலம் விரித்து
நெளிந்துவரும் தென்றலினை வளையவிட்டுப்
பால்போன்ற இதயத்தைப் பிள்ளை யாக்கிப்
பண்பினையும் அன்பினையும் துணைவர் ஆக்கி
வாழுங்கள் எனவிட்டாள் தமிழ் மூதாட்டி!

வாழ்கின்றார் கோவையிலே நல்ல மக்கள்!

சூழ்கின்ற பண்பெல்லாம் கோவையில்தான்!

சுவையெல்லாம் பண்பெல்லாம் கோவையில்தான்!

ஏனுங்க! என்னவுங்க! ஆமா முங்க!
இருக்குங்க! சரியிங்க! பாக்க வாங்க!
மானுங்க! வேணுங்களா! வாங்கிக் கோங்க!
மலைப் பழமும் இருக்குங்க! எடுத்துக்கோங்க!
தேனுங்க! கையெடுங்க! சாப்பிடுங்க!
திருப்பூரு நெய்யுங்க! சுத்த முங்க!
ஏனுங்க! எழுந்தீங்க! உக்காருங்க!
ஏ, பையா! பாயசம் எடுத்துப் போடு!

அப்பப்பா! கோவையிலே விருந்து வந்தால்
ஆறுநாள் பசிவேண்டும்!
வயிறும் வேண்டும்!

தப்பப்பா! கோவைக்கு வரக்கூடாது!
சாப்பாட்டி னாலேயே சாக டிப்பார்!

ஒப்பப்பா இவருக்கு வள்ளல் ஏழ்வர்!

உயர்வப்பா இவர்நெஞ்சம் ஊற்றின் தேக்கம்!
கொடுத்தவரை பாடுவ தெம்குல வழக்கம்

கொடைக்கெனவே படையெடுத்தோர் புலவர் பல்லோர்
இனித்தசுவைப் பழங்கொடுத்த வள்ளல் பற்றி
இயன்றவரை பாடிவிட்டாள் ஔவைத்தேவி
தனித்தனியே கனிவைத்துத் தேனும் வைத்துத்
தந்தானைப் புகழ்ந்தானே கம்பன் அன்றும்
கொடுத்தவனைப் புகழ்வதுதான் புலவன் பாட்டு
குறையெதற்கு?

நானுமதைச் செய்துவிட்டேன்.

– கவியரசர் கண்ணதாசன்

சிறுகூடல்பட்டியில் பிறந்த கண்ணதாசன் கோவையைப் பற்றி எவ்வளவு அழகாக சொல்லி இருக்கார் பாருங்க. இதுவே நான் சொல்லியிருந்தால், ஊர்ப் பாசத்தில் சொல்றேன் என சொல்லிடுவீங்க.   

“சுவையெல்லாம் பண்பெல்லாம் கோவையில்தான்!”

நானும் கோவைதானுங்கோ.

– சிம்ம வாகனி

Comments

comments
20 thoughts on “இது நம்ம ஊருங்க!!

 1. zdporn

  834429 316526For some cause the picture just isnt loading appropriately, is at this time there an issue? 738779

 2. ADME

  467225 729665Hello! Ive been reading your internet web site for a even though now and finally got the courage to go ahead and give you a shout out from Kingwood Texas! Just wanted to say maintain up the great work! 421943

 3. Colarts Diyala

  756735 344588light bulbs are great for lighting the home but stay away from incandescent lamps because they produce so significantly heat;; 624834

 4. DMPK

  322582 179751I believe one of your ads caused my browser to resize, you might want to put that on your blacklist. 352479

 5. ADME studies

  491467 633608Oh my goodness! a great post dude. Thanks Nonetheless My business is experiencing concern with ur rss . Do not know why Struggling to join it. Is there anybody obtaining identical rss concern? Anyone who knows kindly respond. Thnkx 309346

 6. loker 2018

  84284 775392A genuinely exciting examine, I may possibly not concur entirely, but you do make some genuinely legitimate points. 187306

 7. warehouse for rent

  565257 145946Oh my goodness! an outstanding article dude. Thanks a lot Even so Im experiencing problem with ur rss . Do not know why Struggle to register for it. Can there be any person locating identical rss problem? Anyone who knows kindly respond. Thnkx 29846

 8. Digital Marketing

  12690 813420His or her shape of unrealistic tats were initially threatening. Lindsay utilized gun 1st basic, whereas this girl snuck outside by printer ink dog pen. I used absolutely certain the all truly on the shade, with the tattoo can be taken from the body shape. make an own temporary tattoo 584991

Leave a Reply

Your email address will not be published.