Ettu-Thikkum-Madhayaanai-fi

எட்டுத்திக்கும் மதயானை விமர்சனம்

Ettu Thikkum Madhayaanai Tamil review

தனது முதற்படத்தின் பெயரிலேயே ‘ராட்டினம் பிக்சர்ஸ்’ எனும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தனது இரண்டாவது படத்தை இயக்கித் தயாரித்துள்ளார் இயக்குநர் K.S.தங்கசாமி. சாகித்திய அகாதமி விருது வாங்கிய நாஞ்சில் நாடனின் நாவலொனின் தலைப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

சாதீயமும் அதிகாரமும் பண ஆசையும் இணைந்து தமிழின் தம்பியான பிரபாவைக் கொன்று விடுகிறது. தமிழ் எப்படிப் பழி வாங்குகிறான் என்பதுதான் கதை.

ஆர்யாவின் தம்பி சத்யா நாயகனாக நடித்துள்ளார். ஆனாலும் இது நாயகனுக்குரிய படமில்லை. நாயகனும் மற்றொரு பாத்திரமாகவே வருகிறார். ஆனால் சாராவாக வரும் ஸ்ரீமுகியை படத்தின் நாயகி எனச் சொல்லுமளவு நடித்துள்ளார். இயக்கியதோடு மட்டுமல்லாமல் முக்கியமான கதாபாத்திரமான தமிழாக படத்தில் தோன்றியுள்ளார் K.S.தங்கசாமி. படத்தின் முக்கியமான அந்தக் கதாபாத்திரத்தை வேறு எவரையேனும் நடிக்க வைத்திருக்கலாம் அவர். காவல்துறை அதிகாரி ரகுபதியாக நடித்திருக்கும் ராஜ்குமார் முரட்டுத்தனமான கதாபாத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். அவர் சன் டி.வி.யில் வந்த ‘அசத்தப் போவது யாரு?’ என்ற நிகழ்ச்சியின் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் கதை இரண்டாம் பாதியில்தான் தொடங்குகிறது. அதற்கு முன் சாராவுக்கும், நடேசனுக்கும் இடையில் காதலென பிடிப்பில்லாமல் உள்ளது முதற்பாதி. பொம்மையாக வரும் சாம் ஆண்டர்சனும் பெரிதாக நகைச்சுவைக்கு உதவவில்லை. ‘எட்டுத்திக்கும் மதயானை’ எனும் படத்தின் பின்னணி பாடலை எழுதிய எழுத்தாளர் ஃபிரான்சிஸ் கிருபா, படத்தில் முக்கியமான வேடமொன்றிலும் நடித்துள்ளார்.

படத்தின் தலைப்பு கொஞ்சம் அதீதமாகவே தெரிகிறது. படத்தில் பெரும்பாலும் நல்லவர்களாகவும்.. இருவர் மட்டுமே மதம் பிடித்துள்ளவர்களாகவும் உள்ளனர்.

Comments

comments