Search
ARR

எல்லாப் புகழும் ரஹ்மான் ஒருவருக்கே!

Kaaviya Thalaivan Press Meet

“காவியத்தலைவன் படத்தில் இசை என்பது மிக முக்கியமான விஷயம். வழக்கமா படத்தில் 6 பாட்டு இருக்கணும் என்பதற்காகவே பாடல்கள் வைப்பாங்க. ஆனா இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரமாகவே இசை இருக்கு. இந்தப் படத்தை ‘ரியல் மியூசிக்கல் ஃபிலிம்’னு சொல்லலாம். கால் நூற்றாண்டு காலமாக கேட்ட ரஹ்மான் இசையை இப்படத்தில் கேட்க மாட்டீங்க. அற்புதமான இசைக்காக ரொம்ப உழைச்சிருக்கார்” என்றார் நாசர்.

“நான் சக்கரக்கட்டி படத்தில் நடிக்கவே ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக் பண்றார் என்பதுதான் காரணம். ஏ.ஆர்.ரஹ்மான் சார் மியூசிக்கில் ஒரு படம் பண்றதே லைஃப் டைம் அச்சீவ்மென்ட். எனக்கு இது அவருடன் இரண்டாவது படம். நான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். எனக்கு இந்தப் படத்தில் சேலஞ்சிங் ரோல். ஒரு நடிகைக்கு இப்படியொரு பெர்ஃபாமன்ஸ் ஓரியன்ட்டட் ரோல் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்” என்றார் வேதிகா.

“நான் சித்தார்த்தைப் பார்த்து அவர் வீட்டில் கதை சொன்னேன். ரொம்ப எனர்ஜிட்டாக இருக்கு. வழக்கமாக வாங்குறதைவிட பாதி சம்பளத்தில் நடித்துத் தர்றேன் என்றார். அப்ப நான், ‘இந்தப் படத்துக்கு ரஹ்மான் சார் மியூசிக் பண்ணா எப்படியிருக்கும்னு நினைக்கிறேன். முடியுமா?’னு கேட்டேன். சித்தார்த், ‘நான் ட்ரை பண்ணிப் பார்க்கிறேன் பாலன்’-ன்னார். சித்தார்துக்கு நன்றி. ரஹ்மான், நான் ரசிச்ச மாமனிதர். இந்தியாவின் ஃப்ரைட் அவர். கேன்ஸ் விழாக்களில் எல்லாம் நான் நேரில் பார்த்திருக்கேன். அங்கலாம் இவரைக் கொண்டாடுறாங்க. அப்படிப்பட்ட நபர் இந்தியாக்கு கிடைச்சது, தமிழிசைக்குக் கிடைச்சது நாம் செய்த பெரிய பாக்கியம்.

வாழ்க்கையை, இசைக்காகவும் சிறிது நேரம் குடும்பத்திற்காகவும் ஒதுக்குகிற மாபெரும் மனிதரவர். இந்தியாவில் இருக்கும் நேரமே கம்மி. அதில் வீட்டிலிருக்கிற நேரம் கம்மி. எல்லா நேரமும் ஸ்டுடியோவில் இருப்பார். இப்படியொரு மனிதர் இயங்க முடியுமான்னு எனக்கே தெரியலை! இசையை ஆன்மாவாக ஒரு மனிதன் மதிச்சால்தான் இது நடக்கும்.

ஒரு ஐடியா கிடைச்சதும் வொர்க்-அவுட் பண்ணிடாம.. அதை ஊதி ஊதி பெருசாக்குறார். வாலி சார்ட்ட கேட்பார்.. இந்த சாங் இப்படியா அப்படியான்னு நோண்டி நோண்டி கேட்டுட்டிருப்பார். டிராமா சாங்னவுடன், ‘போட்டு அறுத்துத் தள்ளிடக் கூடாது பாலன். நாம கவனமா இருக்கணும். அப்படியும் இப்படியும் இலாம பேலன்ஸ்டான ஓரிடத்தில் கொண்டுபோய் சாங்ஸை லான்ச் பண்ணிடணும். அந்த க்ளாரிட்டிக்காகதான் பாலன் நான் வெயிட் பண்றேன்’ என ஆரம்பம் முதலே சொல்லிட்டிருந்தார். மிக அற்புதமாக சாங்ஸ் போட்டுக் கொடுத்திருக்கார். கமர்ஷியலாகவும் இருக்கு. நியூ ஜானரிலும் இருக்கு” என்றார் இயக்குநர் வசந்தபாலன்.

“என்னை ரஹ்மான் சாருக்கு அசிஸ்டென்ட் டைரக்டராகத் தெரியும். பின் நடிக்க வந்து அவர் இசையில் நாலு படம் பண்ணிட்டேன். எப்ப மீட் பண்ணாலும், என்கரேஜிங்கா பேசுவார். ‘ரொம்ப நாளுக்கு அப்புறம், ஒரு நல்ல கதை. உங்களுக்குப் பிடிக்கும்’னு சொல்றளவுக்கு காவியத்தலைவன் கதையை நம்பினேன். நான் பாலன்கிட்ட, ‘எனக்குக் கேட்கிற அளவு தைரியமிருக்கு. நான் கேட்கிறேன்’ எனச் சொன்னேன்.

ரஹ்மான் சாரை கான்டேக்ட் பண்ணி, ‘ஒரு கதையிருக்கு கேட்கிறீங்களாண்ணா?’ன்னு கேட்டேன். சரின்னார். வசந்த்பாலனை அவரில் நேர்ல கூட்டிட்டுப் போய், அவங்க இரண்டு பேரையும் ஒரு ரூமில் உட்கார வச்சுட்டு ஓடிப் போயிட்டேன். அப்புறம் ரூமுக்கு வந்து பார்த்தேன். வசந்த்பாலன் டயர்டாகப் பார்த்தார். ரஹ்மான், ‘சரி கிளம்புங்களேன்’ என்பதுபோல் பார்த்தார். நாங்க கிளம்பிட்டோம்.

‘கிட்டப்பா ரெடி’ன்னு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினார். ஆல்ரெடி காவியத்தலைவன் மேல் காதலும் நம்பிக்கையும் இருந்தது. ரஹ்மான் எனும் முத்திரை குத்தப்பட்டதும், ஆஸ்கார் கிடைச்சதுபோல சந்தோஷமாக இருந்தது. நாசர் சொன்னாப்ல எல்லாப் படத்திலும் ஆறு பாட்டிருக்கும். ஆனா கதையும், பாடலும், இசையும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு பூந்து எல்லாரையும் ஒரு மேஜிக்கல் ஜர்னிக்குக் கூட்டிட்டுப் போற படமிந்த காவியத்தலைவன்” என்றார் சித்தார்த்.

“இவங்க எல்லாம் பேசுறத பார்த்து பயந்துட்டேன். இவங்களாம் அவ்ளோ பேஷனேட்டாக வொர்க் பண்ணியிருக்காங்க. நானும்தான். இந்தப் படம் மியூசிக் பண்ணும்பொழுது ஹாலிவுட்ல ஒரு படம் பண்ணிட்டிருந்தேன். வெரி வெரி டார்க் மூவி. அப்புறம் அதை விட்டுட்டேன். படத்துல மொத்தம் 20 பாட்டு. நாடங்கிறதால சிலது சின்னது; சிலது பெரிதுன்ற மாதிரி. 1930இல நடக்கிற மாதிரி ஃபிலிம் என்பதால், எந்த மாதிரி பாட்டு பண்ணலாம், என்ன ராகம் யூஸ் பண்ணலாம்னு யோசிச்சு வொர்க் பண்ணியிருக்கோம். அதே போல கிட்டப்பா அந்தக் காலத்துல ஒரு ஸ்டாண்டர்ட் கிரியேட் பண்ணியிருக்காரு. சோ அந்த பீரியட்டுக்கு கொஞ்சமாச்சும் இசை ஒட்டுற மாதிரியிருக்கணும். இந்தப் படத்தில பெரிய டீம் எஃபர்ட் இருக்கு. இந்தப் படத்தில் வொர்க் பண்ணதில் ரொம்ப பெருமையாக இருக்கு. எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே!” என்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.