Search
Minor

கற்பழிக்கப்படும் மைனர்கள்

2007 – 5,045
2008 – 5,446
2009 – 5,336
2010 – 5,484
2011 – 7,112
2012 – 8, 541

கடைசி ஆறாண்டில், இந்தியாவில் கற்பழிக்கப்பட்டுள்ள மைனர்களின் எண்ணிக்கை என National Crime Records Bureau (NCRB) வெளியிட்டுள்ள அறிக்கை இது.

*டெல்லியில் மட்டும் எப்பொழுதும் 300க்கு குறையாமல் போலீசாரிடம் வழக்குகள் பதியப்படுமாம். 2012 இல் 415 வழக்குகள் பதியப்பட்டிருக்காம்.

*எப்பொழுதும் மத்தியப் பிரதேசம் தான் முதலிடமாம் (2008 இல் மட்டும் உத்திரப் பிரதேசம் முதலிடம் பெற்றுள்ளது).

2012 இல் கொல்லப்பட்ட மைனர்களின் எண்ணிக்கை: 1,597

உத்திரப் பிரதேசம் – 449
மகாராஷ்டிரா – 201
பீகார் – 128
டெல்லி – 39
(ஜம்மு & காஷ்மீரில் மட்டும் எந்த மைனரும் கொல்லப்பட்டதாக வழக்கு பதியப் படவில்லை.)

2012 இல் சிசுக்கொலை: 81

மத்தியப் பிரதேசம் – 17 (2007 இல் 61)
உத்திரப் பிரதேசம் – 14 
மகாராஷ்டிரா – 11

(2009 இல், தமிழ்நாட்டில் 9 சிசுக்கொலை நடந்துள்ளது.)

கருச்சிதைவு எண்ணிக்கை:

2007 – 96
2008 – 73
2009 – 123
2010 – 11
2011 – 132
2012 – 210

இவை அனைத்தும் பதியப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை. இவை முழுமையானவை அல்ல.

களவியல் தொந்தரவுக்கு உள்ளாகும் குழந்தைகளில் 95% சதவிகிதத்தினர், தனக்கு மிகவும் நெருக்கமானவர்களாலேயே (உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள்) பாதிப்புக்கு உள்ளாகின்றனர். குடும்பப் பெருமை பங்கப்பட்டு விடுமென பெற்றோர்கள் வழக்குகள் பதிவதில்லை. சில இடங்களில் பெற்றோர்களே வரம்பு மீறுவதும் உண்டு.




Leave a Reply