
தனுஷ் நடித்த 3 படத்தைத் தொடர்ந்து ஆர்.கே.ப்ரொடெக்ஷன்ஸ்(பி) லிட். பட நிறுவனம் சார்பாக விஜயலட்சுமி கஸ்தூரிராஜா தயாரிக்கும் படத்திற்கு “காசு பணம் துட்டு “ என்று பெயரிட்டுள்ளனர்.
கஸ்தூரிராஜா இயக்கத்தில் “அசுரகுலம்” என்ற பெயரில் தயாரான படமே “காசு பணம் துட்டு” என்ற பெயர் மாற்றத்துடன் வெளிவர உள்ளது. இதே பெயரில் மலையாளத்திலும் இப்படம் தயாராகியுள்ளது. இந்தப் படத்தில் மித்ரன் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக சானியா மற்றும் மும்பையைச் சேர்ந்த சுயோசா சாவந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் பாலா என்ற புதுமுகம் நடிக்கிறார் மற்றும் வினோத், மினடிஸ், அஜீத்ராஜா ஆகியோர் நடிக்கிறார்கள்.
“சென்னை குடிசைப் பகுதி மக்களின் யதார்த்த வாழ்க்கை இது. குடிசை பகுதிகளில் வாழும் மக்களை இந்தச் சமூகம் என்ன மாதிரியான நிலைமையில் வைத்திருக்கிறது?
பிறக்கின்ற குழந்தைகள் யாரும் கிரிமினலாகப் பிறப்பதில்லை சூழ்நிலைதான் அவர்களை கிரிமினல்களாக்குகிறது. இவர்கள் வாழும் வாழ்க்கையில் தவறுகளில்லை. ஆனால் தவறுகளே வாழ்க்கையாகிப் போவதுதான் கொடுமை. இவர்களை பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டுமானால்..

இதுதான் கதைக்களம். கஸ்தூரிராஜா படமென்றால் இப்படித்தான் இருக்கும் என்கிற வரைமுறைகளை மாற்றிக் காட்டும் படமாக காசு பணம் துட்டு இருக்கும்” என்கிறார் இயக்குநர் கஸ்தூரிராஜா.
இசை – சாஜீத் (ஏ.ஆர்.ரஹைனாவின் உதவியாளர்)
நடனம்/ஸ்டன்ட் – பாலா
எடிட்டிங் – அபிலாஷ் விஸ்வநாத்
கதை,திரைக்கதை,பாடல்கள்,வசனம், இயக்கம் – கஸ்தூரிராஜா
தயாரிப்பு – திருமதி.விஜயலட்சுமி கஸ்தூரிராஜா.
/div>