Search

குட்டிப்புலி இசை – ஒரு பார்வை

“வாகை சூடவா” படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த எம். கிப்ரான், அடுத்து “வத்திக்குச்சி”யில்  மேலும் தன் திறமையை  நிரூபித்தார். இப்பொழுது சசிகுமார்  மற்றும் லக்ஷ்மி மேனன் நடிப்பில் மூன்றாவதாக  குட்டி புலி இசை வெளிவந்துள்ளது.  

வைரமுத்துவின் வரிகளில் படத்தில் மொத்தம் நான்கு  பாடல்கள்.

1.அருவாக்காரன்: 4.5/5
பாடியவர் – பத்மலதா, கௌஷிகி சக்ரவர்த்தி

அருமையான குரல், அற்புதமான இசை மற்றும் வைரமுத்துவின் அழகிய வரிகள். இது போதாதா ஒரு பாடல் பிரபலமடைய? “அருவாக்காரன்” பாடல் பலரது கைப்பேசியில் ரிங் டோனாக அமையவிருக்கிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமுமில்லை.

2. காத்து காத்து: 4.2/5
பாடியவர் – கோல்ட் தேவராஜ் 

ஒரு புதுவகையான பாடல், “கோல்ட் தேவராஜின்” குரலில் மற்ற நாட்டுபுற பாடல்களில் இருந்து ரொம்பவே வேறுபட்டு நிற்கிறது. தொடக்கம் முதலே பின்னிட்டாங்க.  

திரையில் காணும்பொழுது முகம் சுழிப்பது போன்ற காட்சிகளின்றி இருந்தால் அனைவரையும் கவரும் பாடலாக அமையும்.
3. ஆத்தா உன் சேலை: 3.7/5
பாடியவர் – சுந்தர் நாராயண ராவ்

தாயை முன்னிறுத்தி ஒரு சோக பாடல். வைரமுத்துவின் வரிகளில், சுந்தர் நாராயண் ராவ்வின் குரல் கிப்ரானின் மென்மையான இசை நமக்குள்ளும் அந்த சோகத்தை உண்டு செய்கிறது. 

4. தாட்டியரே தாட்டியரே: 4/5
பாடியவர் – கோல்ட் தேவராஜ் 

கிராமத்து நாட்டுபுற வகையில் இன்னொரு பாடல். கோல்ட் தேவராஜ் மீண்டும் இப்பாடலில் கலக்கியிருக்கிறார்.

“அருவாக்காரன்” மற்றும் “காத்து காத்து” பாடல்களை திரையில் காண ஆவலோடு இருக்கிறேன். இப்பாடல்கள் மூலம் மக்கள் மனதில் மீண்டும்  கிப்ரான் இடம்பிடிப்பார் என்று எண்ணுகிறேன்.

– இரகுராமன்




Leave a Reply