Search
Molapalayam-01

சிதிலமடையும் மோளப்பாளையம் மலை

1.மோளப்பாளையம் கிராமத்தின் இயற்கை அமைப்பு:

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் மோளப்பாளையம் கிராமம் இயற்கையாக மலைகள் கொண்ட கிராமம் ஆகும். இங்கு உள்ள மக்கள் வேளாண்மை செய்து வருகிறார்கள் .ஆடு, மாடுகள் வைத்து பராமரித்து வருகிறார்கள். மோளப்பாளையம் கிராமத்தைச் சுற்றி இருபது விவசாய கிராமங்கள் உள்ளன . இந்த கிராமங்களை மலைகள் சூழ்ந்து உள்ளன.வனவிலங்குகள், தேசிய பறவை மயில் மற்றும் பல்வேறு மூலிகை மரங்கள் இந்த மோளப்பாளையம் மலைப்பகுதிகளில் உள்ளன. மோளப்பாளையம் கிராமத்தில் இருந்து ஏழு கிலோமீட்டரில் புகழ்ப் பெற்ற கொல்லிமலை மற்றும் னைனாமலை ஆகியவை உள்ளன. மோளப்பாளையம் கிராமத்தில் உள்ள மலைகைளச் சுற்றி இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்குள் மூன்று பெரிய ஏரிகள் உள்ளன (பொன்பரப்பு ஏரி, கதிரானல்லூர் ஏரி, சிங்களாந்தபுரம் ஏரி). இதில் பொன்பரப்பு ஏரி நூற்று ஐம்பது ஏக்கர் பரப்பு கொண்டது. இந்தமைலகளில் இருந்து வரும் நீரோடைகளில் உள்ள நீர் இந்த ஏரிகளுக்குச் செல்கிறது. இந்த மலைகளின் ஒரு பகுதி அரசு வருவாய்ப் புறம்போக்கு நிலம் ஆகும். இதனை நாமக்கல் மாவட்டம் வன அலுவலகம் தனது கட்டுப்பாட்டில் வைத்துப் பராமரித்து வருகிறது. இம்மலைகளில் பல இன மரக்கன்றுகள் 1978-­‐1989 இல் நடப்பட்டு அவை வனத்துறையால் பாதுகாத்து வரப்படுகின்றன. இங்குப் பொய்யும் மழை நீரின் அளவு இந்த மலைகளினால் நிர்ணயிக்கப்பெறுகிறது. .

2. 23.10.2010, இயற்கைச் சீரழிவு தொடங்கிய நாள்:

முதன் முதலாக 23.10.2010 அன்று, பொது மக்களின் கருத்துகைள விதிமுறைகளின்படி கேட்காமல் வருவாய்த்துறை அதிகாரிகள் போலியான பத்து கையொப்பங்கள் இட்டு ஆட்சேபனை ஏதும் இல்லை எனப் பதிவு செய்துகொண்டு மோளப்பாளையம் கிராமத்தில் உள்ள மலைகளில் ஒன்றில் சர்வே எண் 120/1 இல் கிராவல் மண் குவாரி அமைத்து இயற்கையை அழிக்கத் தொடங்கினார்கள்.இதற்கு அப்போதைய மாவட்ட ஆட்சித் தைலவர் திருமதி. மதுமதி அவர்கள் அனுமதி வழங்கினார். அவருக்குப் பின் வந்த மாவட்ட ஆட்சியர்களால், இதே தவறான முறையில், மேலும் புதிதாக ஐந்து புதிய மண் குவாரிகளுக்கு உரிமம் (திரு.குமரகுருபரன், திரு.ஜெகநாதன்) வழங்கப்பட்டது. இவ்வாறான உரிமங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கீழ் பணி புரியும் அதிகாரிகள் மாவட்ட வருவாய் ஆய்வாளர், சார் ஆட்சியர், கனிமவளத்துறை உதவி இயக்குனர், வட்டாட்சியர், கிராம நிர்வாக அதிகாரி ஆகிய அனைவரும் தவறான அறிக்கை கொடுத்து இந்த இயற்கைச் சீரழிவுக்கு முதற்காரணமாக இருந்துள்ளார்கள்.

இயற்கை அழிவால் உண்டாகும் பாதிப்புகள்:

>> நிலத்தடி நீர் ஆதாரம் ஒரு குறுகிய எல்ைலக்குள் சுருங்கும்.
>> மண் வளம் பாதிக்கப்படும்.
>> சிறு உயிரினங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
>> மக்கள் ஊரை விட்டு வெளியேற நேரிடும்.
>> குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும்.
>> சுற்றுச் சூழல் மாசு பட்டு புவி வெப்பம் மேலும் அதிகம் ஆகும்.
>> மழைப் பொய்த்துவிடும்.
>> வனவிலங்குகள் மற்றும் பறைவகளின் புகலிடமும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்.
>> நாளடைவில் இச்சுற்றுப் பகுதிகள் மக்கள் வசிக்க தகுதியற்றனவாக மாறிவிடும்.
>> காட்சியின் கோரம் (Visual cruelty because of the scaring of the land).

3. இயற்கையைப் பாதுகாக்க உள்ளூர் மக்கள் மேற்கொண்ட முயற்சிகள்:

முதன் முதலில் பதினைந்து கிராம பொதுமக்கள் ஆட்சேபணை கையொப்பங்கள் பதிவு செய்து மாவட்டம் மற்றும் மாநில அளவிலான அனைத்துத் துறைகளுக்கும் பதிவு அஞ்சல் மூலம் மனுக்கள் அனுப்பினர். தமிழ்நாடு முதல்வர் அவர்களின் தனி பிரிவில் இருந்து கிராம நிர்வாக அலுவலர் வரை ஆட்சேபணை மனுக்கள் அனுப்பபட்டன. பதிவு அஞ்சல், மின் அஞ்சல், நிகரி ,மாவட்ட ஆட்சியரின் வேளாண் குறைத் தீர்க்கும் கூட்டம் என அனைத்து வழிகளிலும் ஆட்சேபணை பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகிறது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துத் துறைகளுக்கும் இம்மலைகளைக் காக்க வேண்டி மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன:

1) தமிழ்நாடு முதல்வர் தனிப்பிரிவு
2) கனிமம் -­ ஆணையர்­ ‐ கிண்டி
3) வனத்துறை -­ பனகல் மாளிகை -­ சைதாபேட்டை
4) மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் -­ கிண்டி
5) சுற்றுச்சூழல் -­ பனகல் மாளிகை – சைதாபேட்டை
6) நில நிர்வாக ஆணையர் ­‐ சேப்பாக்கம்
7) வனத்துறை ­ ‐ நாமக்கல்
8) சுற்றுச்சூழல் – நாமக்கல்
9) மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ­‐ நாமக்கல்
10) சார் ஆட்சியர்­ ‐ நாமக்கல்
11) வட்டாட்சியர் -­ நாமக்கல்
12) வட்டாட்சியர் – இராசிபுரம்
13) உதவி இயக்குனர் – கனிமம் – நாமக்கல்
14) வனத்துறை சரகம் மோளப்பாளையம் ­ ‐ இராசிபுரம்
15) கிராம நிர்வாக அலுவலர் – மோளப்பாைளயம்
16) கிராம நிர்வாக அலுவலர் ­‐ பேளுகுறிச்சி
17) கிராம நிர்வாக அலுவலர் – மேலப்பட்டி
18) கிராம நிர்வாக அலுவலர் – கல்குறிச்சி
19) மாவட்ட ஆட்சி தலைவர் ­ ‐ நாமக்கல்

4. இந்தக் குவாரிகளின் உரிமங்கைள இரத்து செய்ய மோளப்பாளையம், மேலப்பட்டி, பள்ளிப்பட்டி, திருமலைப்படி, கல்குறிச்சி ஆகிய ஐந்து ஊராட்சிளும் மற்றும் கிராம சபைகளும் தீர்மானம் நிறைவேற்றி, கீழ்வரும் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளன.

>> மாவட்ட ஆட்சி தலைவர் ­‐ நாமக்கல்
>> சார் ஆட்சியர் ­ ‐ நாமக்கல்
>> சுற்றுச்சூழல் – பனகல் மாளிகை ­‐ சைதாபேட்டை
>> கனிமம் – ஆணையர்­‐ கிண்டி

5. பதிவு செய்யப்பட்ட ஆட்சேபணை மனுக்களின் விவரங்கள்:

>> பதிவு அஞ்சல் = 110
>> மின் அஞ்சல் = 50
>> மாவட்ட ஆட்சியரின் விவசாய குறைத்தீர்க்கும் கூட்டம் = 40
>> நிகரி = 5
>> தகவல் அறியும் உரிமை சட்டம் ­‐ கணிமம் ­‐ நாமக்கல் -­ பொது தகவல் அலுவலரிடம் நிலுவையில் உள்ள மனுக்கள் = 90
>> தகவல் அறியும் உரிமை சட்டம் – வட்டாட்சியர் – இராசிபுரம் -­ பொது தகவல் அலுவலரிடம் நிலுவையில் உள்ள மனுக்கள் = 50


6. இவ்வாறு உள்ளூர்ப் பொது மக்களின் ஆட்சேபணை மனுக்கள் பதிவு செய்யப்பட்டும், ஊராட்சித் தீர்மானங்கள் பதிவு  செய்யப்பட்டும், தொடர்ந்து பதிவு செய்யபட்டுக்கொண்டும் வந்தபோதிலும், அதிகாரிகள் உள்ளூர் மக்கள் நலைனயோ, நாட்டு நலைனயோ கருத்தில் கொள்ளாமல், குவாரி செயல்பாடுகளை நிறுத்தி வைக்காமல், தாங்கள் தொடங்கிவைத்த இயற்கைப் பேரழிவுச் செயலைத் தொடர்ந்து நடத்த வழிவகை செய்து வருகின்றனர். பதிவு செய்யப்படும் ஆட்சேபணை மனுகளுக்கும், புகார் மனுகளுக்கும் அதிகாரிகள், சட்டத்திற்கும் உண்மைக்கும் புறம்பாக, தவறான தகவல்களைத் தொடர்ந்து கொடுத்து, இயற்கையை விரைவாக அழிக்க வழிவகை செய்து வருகின்றனர்.

7. கேரளாவும் தமிழகமும்:

கேரள மாநிலத்தில் ஆற்றுமண் அள்ளவும் கருங்கல் குவாரிகள் அமைக்கவும் மிகக் கடுமையான விதிமுறைகள் உண்மையிலேயே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தமிழக ஆற்றுமண் கேரளாவுக்குக் கடத்தப்படுவது பற்றி கேரளா டெவலப்மென்ட் காங்கிரஸ் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை சான்று கூறுகிறது. கேரள ஆற்று மண் தமிழகத்துக்குக் கடத்தப்படாதது நாம் காணும் உண்மை ஆகும். ஊழலில் திளைக்கும் அதிகாரிகள்தாம் இதற்கு முழுமுதற்காரணமாகும்.

8. மீண்டும் ஒரு சிலப்பதிகாரம்:
அரசு ஊழியர்களால் கொடுமை இழைக்கப்பட்ட கண்ணகி இதனைத் தட்டிக்கேட்க நாட்டில் சான்றோரே இல்லையா என்று கேட்டாள். “சான்றோரும் உண்டுகொல்? சான்றோரும் உண்டுகொல்?” என்று வினவினாள். இன்று மோளப்பாளையத்தில் காலங்காலமாக, தலைமுறை தலைமுறையாக வாழும் எளிய வேளாண் மக்களும் தமிழ் நாட்டு அறிஞர் பெருமக்கள் துணையை நாடி இன்று இந்த ஊடகத்துறையினர் முன் வந்துள்ளனர்.

9. சிறுவனின் கேள்வி:

மோளப்பாளையத்தில் காலங்காலமாக வாழ்ந்துவரும் மக்களின் இன்றைய தலைமுறைச் சிறுவன், தங்கள் ஊர் மலை சிதலமடைவதைக் காணச்சகிக்காததால், தான் பள்ளி செல்லும் பாதையையே மாற்றிக்கொண்டதாக மனம் வருந்திக் கூறுகிறான். அந்தச் சிறுவனுக்கு நாமென்ன பதில் சொல்லப் போகிறோம்.

அறிஞர் பெருமக்களே!
ஆதரவு தாரீர் மலைவளம் காக்க!
அணி திரள்வீரே தமிழ்நிலம் காக்க!

பொதுமக்கள்,
மோளப்பாளையம்.
Leave a Reply