Irantha-Pin---3

சூட்சும தளம்

இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 2

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூவுலகத்தை தவிர, வேறு சூட்சும உலகங்களும் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். அப்போது தான் மரணம், மரணத்தின் பின் உள்ள மர்மங்கள் பற்றிய தெளிவான ஒரு ஆய்விற்கு அடித்தளம் கிடைக்கப் பெறுவதுடன் அதனைப் பற்றிய சிறப்பான முடிவையும் பெற முடியும்.  தற்போதைய விஞ்ஞானமும், மனோதத்துவமும் மனிதனின் உணர்திறனுக்கு அப்பாற்பட்ட ஆய்வுகளை செய்யும் திறன் கொண்டவை அல்ல. ஆயினும் இந்தத் துறைகள் இன்னும் வளர்ச்சி அடையும் பட்சத்தில் எமது புலன்களுக்கு அப்பாற்பட்ட உலகங்களும், இயக்க சக்திகளும் இருக்கின்றன என்பதை விஞ்ஞானரீதியாக அறிந்து உணரும் வாய்ப்புக்கள் கிட்டும்.

சில வருடங்களுக்கு முன்னர் வெறும் பிரமைத் தோற்றங்கள் என எண்ணப்பட்டவைகள் எல்லாம் இப்போது ஆதார பூர்வமான அதிசய நிகழ்வுகள் என ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அதாவது,

 • புலன்களுக்கு அப்பாற்பட்டதைக் காணும் ஆற்றல் (Clairvoyance),
 • புலன்களுக்கு அப்பாற்பட்டதைக் கேட்கும் ஆற்றல் (Clairaudience),
 • கண்ணுக்குத் தெரியாத சக்தியினால் நம்முன்னே பொருட்கள் தோற்றுவிக்கப் படுத்தல் (Apports),
 • வெளிப்படைத் தொடர்பு இல்லாமலேயே தொலைவில் இருக்கும் பொருளை இயக்குதல் (Telekinesis),
 • தொடுவதன் மூலம் பொருட்களின் அல்லது உயிரினங்களின் உள்ளியல்புகளை அறிதல் (Psychometry),
 • மெய்மறந்த நிலையில் தாம் அறிந்திராத மொழிகளைப் பேசுதல் (Xenoglossy)

ஆகிய ஆற்றல்கள் மனிதர்களால் வெளிப்படுத்தப்படுவது இன்று விஞ்ஞானரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாகிவிட்டது. இந்தகைய ஆற்றல்கள் புலனுணர்வுக்கு அப்பாற்பட்ட தோற்றங்கள் (Extra Sensory Perception) என்று விஞ்ஞானம் ஏற்றுக் கொள்கிறது.  இத்தகைய இயல்புகள் நாம் வாழும் இந்த பூமியின் இயல்புகளுக்கும், விதிகளுக்கும் அப்பாற்பட்ட நாம் அறிந்திராத எதோ ஒரு விதிகளுக்கு அமைந்த செயற்பாடுகள் என்று வரையறுப்பதே பொருத்தமாக இருக்கும்.

உண்மையிலேயே இத்தகைய செயற்பாடுகள் விஞ்ஞானிகளையும் மனோதத்துவ ஆராச்சியாளைகளையும் திணறடிக்கச் செய்கின்றன என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மையாகும்.  நம் விஞ்ஞானிகளையும் மனோதத்துவ ஆராய்ச்சியாளர்களையம் திணறடிக்கும் இவ்வுணர்வுகளுக்கான நிலைக்களன் வேறொரு சூட்சும தளம் (Astral Plane) என எண்ணவேண்டியுள்ளது.

இவற்றைப் பற்றி முதலில் பதிவு செய்தவர்கள் யார்?

இங்கிலாந்து, அமெரிக்க பல்கலைக்கழகங்களின் தலை சிறந்த விஞ்ஞானிகளும் பேராசிரியர்களும் (Sir William Crooks, Dr, F.W.H.Miyers. Sir Oliver Lodge, Richardd Hodson, Edmmund Gurney, Frank Padmore, R.D. Own, Prof.Aksakof, Russel Wallace, C.N.Jones) ஒன்று சேர்ந்து சில ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்கள். இவர்களால் மனோதத்துவ ஆராய்ச்சியாளர் சங்கம் (Society for the Psychical Research) என்ற ஓர் அமைப்பு 1885 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. எஸ்.பி.ஆர் என்று பிரபல்யமாகிய இச்சங்கத்திற்கு அமெரிக்காவிலும் ஒரு கிளை இருந்தது.

மனிதன் இறந்த பின் வேறொரு நிலையில் வாழ்கிறான் என்ற அபிப்பிராயத்தை யார் தெரிவித்தாலும் அவர் கிறிஸ்தவ உலகின் பலத்த கண்டனதுக்கு ஆளாகக்கூடிய கால கட்டத்தில் இச்சங்கம் தமது ஆராய்ச்சிகளின் முடிவுகளைத் துணிவுடன் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்படி என்னதான் வெளியிட்டார்கள்?

Comments

comments
15 thoughts on “சூட்சும தளம்

 1. MiguJethynah

  Vendite Kamagra Cilais And Priligy Il Cialis Da 5 Mg [url=http://bestviaonline.com]viagra[/url] Potenzmittel Cialis Tadalafil Comprar Cialis Tenerife Buy Doxycycline Online Canada

 2. MiguJethynah

  Kamagra Jelly 100mg Le Havre Osu Levitra Comprar Acheter Du Xenical En Ligne [url=http://howtogetvia.com]viagra online[/url] Zithromax 4 Tablets At Once Can I Get Lithium Over The Counter Zithromax Tri Pak Dose

Leave a Reply

Your email address will not be published.