Nayan-Kamal

முருகதாஸின் ஹாட்ரிக் வெற்றி – ராஜா ராணி!

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் உடன் இணைந்து ஏ.ஆர். முருகதாஸ் வழங்கும்  தொடர் வெற்றி  ‘ராஜா ராணி‘.

அக்டோபர் 1. பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து ஏ.ஆர். முருகதாஸ் இணைந்து வழங்கிய, அட்லியின் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா இணைந்து நடித்து வெளி வந்த ‘ராஜா ராணி’ முதல் வார இறுதியில் 12.2 கோடி வசூல் செய்து உள்ளது. இது இதுவரை இந்த வருடம் வெளி வந்த படங்களில் நான்காவது பெரிய வசூல் என கூறப்படுகிறது. ஆர்யா நடித்து  இதுவரை வந்த படங்களில்  இதுவே பெரிய படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மட்டுமல்ல வெளி நாட்டிலும் இந்தப் படத்தின் சாதனை பிரமிப்பு ஊட்டுகிறது.டாலர் கணக்கில் இந்த படத்தின் வெளிநாட்டு வசூல் 800,000 டாலரையும் தாண்டுகிறது. மலேசியாவில் ‘ராஜா ராணி’யின்  வசூல் சாதனை பிரம்மாண்டமாய் இருக்கிறதாக விவரங்கள் தெரிவிக்கிறது.

2011 ஆம் ஆண்டு வெளி வந்த ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் ஏ.ஆர்.முருகதாசுடன் இணைந்து தயாரிக்கும் மாபெரும் வெற்றிப்படமான ‘ராஜா ராணி’  படமாக்கப்பட்ட நேர்த்திக்காகவும், குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும் வகையில் படமாக்கப்பட்ட விதத்துக்காகவும் ஊடகங்கங்கள் மட்டுமின்றி , பொது மக்கள் இடையே கூட பேராதரவு பெற்றுள்ளது. படத்தைப் பொது மக்களிடயே கொண்டு செல்ல பல்வேறு யுத்திகளைக் கையாண்ட விதத்துக்காக இப்படத்தின் விளம்பரக் குழுவுக்கும் ஏகோபித்த பாராட்டு கிடைத்தது.

தன்னுடைய முதல் படம் மூலமாக பெரும் வெற்றியைக் குவித்த இயக்குநர் அட்லி இந்த வெற்றியைப் பற்றிக் கூறும் போது, “என்னுடைய சந்தோஷத்துக்கு அளவே இல்லை. படத்துக்கு பேராதரவு தந்த ஊடக நண்பர்களுக்கும் , பொது  மக்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. குடும்பத்தோடு படம் பார்க்க வருவோரை மனதில் கொண்டு இயற்றப்பட்ட இப்படத்துக்கு குடும்பங்கள் ஆதரவு கொடுப்பது பெரும் மகிழ்ச்சி. இந்தக் கதையை எழுதும் போதே இது குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன். காலை காட்சிக்கும் பெண்கள் படம் பார்க்க வருவதாக கேள்விப்பட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்” என்கிறார்.

தயாரிப்பாளர் முருகதாஸ் கூறும் போது, “ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தாருடன் என்னுடைய கூட்டு வெற்றி தரும் கூட்டாகவே அமைந்து உள்ளது. உலகெங்கும் பரந்து கிடக்கும் இந்த நிறுவனத்தின் ஆணி வேர்கள், படத்தை தெளிவாகத் திட்டமிட்டு வெளியிட உதவுகிறது.கூட்டாகத் தயாரிக்க வேண்டும் என முடிவு செய்யும் போதே தரமான படங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என தீர்மானமாக இருந்தோம்.அட்லீயின் கதையில் நாங்கள் எதிர்பார்த்த எல்லா அம்சங்களும் இருந்தது” என்கிறார்.

ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விஜய் சிங் கூறும் போது, “முருகதாசுடன் இணைந்து தயாரிக்கும் எங்கள் படங்களுக்கு இவ்வளவு ஆதரவு கிடைப்பது எங்களுக்கு பேரானந்தமே! நல்ல தரமான கதை, புதிய திறமைகளை அறிமுகப்படுத்துவது என்பதில் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்தோம். படங்களை வாங்கும் வர்த்தகத்தை விட இந்த முயற்சி மிகவும் பலனுடையதாக இருந்தது மகிழ்ச்சி. ஆர்யா – நயன்தாரா திருமண அழைப்பு விளம்பரம் மற்றும் விளம்பரங்கள் மூலமாக ‘road block ‘ செய்த விதம் எல்லோராலும் பாராட்டப்பட்டது . இந்த நவீன யுத்திகாக இயக்குநர் அட்லியையும், எங்களது விளம்பரத் துறையையும்  மனதார பாராட்டுகிறேன். எவ்வளவு விளம்பரம் செய்தாலும், கதை கரு பலவீனமாக இருந்தால் அது பலன் தராது. எங்களது பெருமையான அறிமுகம் அட்லியின் அருமையான கதை அமைப்பு  மற்றும் தேர்ந்த தொழில்நுட்ப யுத்தி அவருக்கு இது முதல் படம்தானா என்று வியக்க வைக்கிறது. அவருடன் அடுத்த படத்துக்கும் இணைய ஆர்வமாக காத்து இருக்கிறோம். 2011ஆம் ஆண்டில் தமிழ் திரை உலகில் அடி எடுத்த வைத்த எங்களது பயணம் இதுவரை வெற்றிகரமாக உள்ளது. வெற்றிப்படத் தயாரிப்பாளர் C .V .குமார் அவர்களுடன் இணைந்து 2014இல் எங்களது வெற்றி பயணம் தொடரும்” என்கிறார். 

Comments

comments




Leave a Reply

Your email address will not be published.