C2H-fi

வீட்டிற்கே வரும் புது சினிமா!

C2H - Cinema To Home

திரையுலகில் அவ்வப்போது விஞ்ஞான வளர்ச்சியால் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். சில மாற்றங்கள் உடனடியாக நடந்து விடும். சில மாற்றங்கள் நடக்க கால தாமதம் ஆனாலும் நடந்தே தீரும்.

காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வந்த ஃபிலிம் சுருள் HARD DISKகளிலும், SD CARDகளிலும் சுருண்டு கொண்டது. 10 கிலோ எடையுடன் ஒரு மனிதன் தூக்கிச் சுமந்து அதன் மூலம் பதிவு செய்யப்பட்ட ஃபிலிம் கேமரா தடாலென டிஜிட்டல் கேமராவாக கைகளுக்கள் வந்தது. அதைப் போலவே, அகன்றத் திரையில் மிரண்டு பார்த்த அந்த அழகிய சினிமா வேறு தளங்களுக்கு நகர்ந்து பார்வையாளர்கள் அவரவர் வசதிக்கேற்ப தேவையான சினிமாவைப் பார்க்கும் வண்ணம் விஞ்ஞானம் தொலைக்காட்சியாகவும், கணினியாகவும் மாற்று சாதனங்களை நமக்கு வழங்கியது.

இருப்பினும், காட்டு யானைகளை அழிப்பது கஷ்டம்; அழிக்கவும் கூடாது என்பது போல திரையரங்கம் என்பது ஓர் அபரிதமான உணர்வுகளைத் தரும் ஓரிடம். இன்றைய ஜாம்பவாங்கள் அனைவரும் இந்த அகன்ற வெண்திரையை அன்னாந்து பார்த்து சினிமா கனவுகளை வளர்த்து வெற்றி கண்டவர்கள்தான். எனவே அதை இழக்கக் கூடாது. அதேபோல் தற்போது திரைத்துறையில் ஏற்பட்டு வரும் இழப்பு திரையுலகே மாண்டு விடும் அபாயம் வரும் போல உள்ள நிலையில் திரையுலக சரி செய்து கொள்வது நலம். ஊர் குளத்திலுள்ள தண்ணீரில் அசுத்தம் இருந்தால், மருந்து போடலாம். ஊருக்கே மலேரியா வந்துவிட்டால், முதலில் ஊரை சுத்தம் செய்து நம்மை பாதுகாப்பது அவசியம்.

கடந்த வருடம் வெளியான படங்களின் எண்ணிக்கையில் 10 சதவிகித படங்களே வெற்றி பெற்று முதலீடு செய்த தொகையை மீட்டிருக்கிறது. 90 சதவிகித வீழ்ச்சியை எல்லோரும் உணர்ந்ததே! இந்த ஆபத்தான நிலையை அலசி ஆராய்ந்து பார்த்ததில் மக்களின் நேரமின்மையும், மக்களுக்கான வேலைப்பளுவில் கிடைக்கும் நேரத்தில் திரைப்படம் பார்க்கும் பழக்கமும், அதற்கான வசதியும் வந்துவிட்ட காரணமே!

அவர்களை எல்லாத் திரைப்படங்களயும் பார்க்க திரையரங்கம் நோக்கி வரவைக்க முடியவில்லை என்பது ஆராய்ந்ததில் உணர்ந்த உண்மை. இதைப் பயன்படுத்தி சில சமூக விரோத சக்திகள் அவர்களது சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி சம்பாதிக்கும் சூத்திரம் தெரிந்தவர்கள். அனுமதியின்றி திரைப்படங்களை பல இடங்களில் திருட்டு வியாபரம் செய்து பிழைப்பு நடத்தவும், அதற்கு மக்களை அடிமைகளாக்கி, திருட்டுத்தனமாகப் பார்ப்பது சரி எனவும் சொல்லி வைத்துவிட்டார்கள்.

சினிமா வியாபாரத்தை எல்லா இடங்களிலும் தொடங்கி, திருட்டுத்தனத்தைக் களைந்து, முதலீடு செய்த பணத்தைத் திருப்ப எடுப்பதே எங்களின் நோக்கமாகும். ஸ்ன்ற வருடம் 300க்கும் மேலான படங்கள் வெளியீட்டிற்குத் தயாராக இருந்த நிலையில் வெளியான படங்கள் 130 மட்டுமே. வாரம் 4 படங்கள் வெளிவரும் நிலையில் இவைகளின் தோல்வியையும் நஷ்டத்தையும் சந்திக்கும் நிலையில் இதற்கு மேலும் படங்களை வெளியிடுவது கடினமும் ஆபத்துமாகும்.

மாற்று வழி உருவாகி விட்டால்.. பெரிய படங்கள், முதலில் திரையரங்களிலும், அடுத்து மாற்றுத் தளங்களிலும், சிறிய படங்கள் மட்டும் திரையிடும் சமயமே மாற்றுத் தளங்களிலும், சிறிய படங்கள் மட்டும் திரையிடும் சமயமே மாற்றுத் தளங்களிலும் திரையிடப்பட்டால் திரைத்துறை நஷ்டத்தை சரிசெய்யவும், தனி மனித நஷ்டத்தை ஈடுகட்டவும் முடியுமென எங்கள் ஆராய்ச்சி உணர்த்தியது.

சிறிய திரைப்படங்கள் குறைந்த எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியிட்டு, அதே நாளில் மற்றத் தளங்களில் எல்லாம் மக்களுக்குக் கொண்டு சேர்த்தால், வெளியாகாமல் தேங்கி நிற்கும் அனைத்துத் திரைப்படமும் வெளியாகவும், வியாபாரமாகவும் வாய்ப்புள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதே C2H – CINEMA TO HOME என்ற நிறுவனம்.. இதில் “2” என்பதே இரண்டாம் தளம் என்று குறிப்பிடுவதாகும். முதல் தளம் திரையரங்கம்; இரண்டாம் தளம் வீடு மற்றும் வசதியான இடங்கள்.

இதன் மூலம் தயாரிப்பாளர்கள் முதலீட்டை மதிக்காமல் திருட்டுத்தனமாக களவு செய்யும் கும்பலிடம் இருந்து சினிமாவை மீட்க முடியும். களவு காலமும் ஒரு மனிதனை எப்படி மாற்றுகிறது என்பதற்கு சமீபத்தில் சில திரையரங்கமே திருட்டுத்தனமாக DVD எடுத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சாட்சியாகும். இந்தக் குற்றங்கள் களையப்படவே C2H- இந்த நிறுவனம் ஒவ்வொரு திரைப்படங்களையும், திரையரங்கம் அல்லாமல் DVD, BLURAY, CABLE, SET-TOPBOX, DTH, ONLINE NETWORK, SATELLITE NETWORK என பல தளங்களில் வெளியிடும்.

DVD NETWORK தமிழகத்தில் மூலை முடுக்கு வரை உருவாக்கப்படுகிறது. இதில் படங்களின் DVD உங்கள் வீடு தேடி வந்து விற்பனை செய்யும் அளவிற்கு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் C2H இன் DISTRIBUTORS, DEALERS சுமார் 7000 பேர் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். அது தவிர சந்தா முறையிலும் DVD உங்கள் வீடு தேடிவரும் வாய்ப்புமுள்ளது. TELESHOPPINGஉம் பண்ணலாம். DVD ONLINE SHOPPING பண்ணும் முறையும் உருவாக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தமிழகம் அல்லாத பிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள் திரைப்படங்களைப் பார்க்க வழி செய்வதே DTH – SET TOP BOX என்ற தளங்களாகும். இந்த இரண்டு தளங்களின் மூலம் பிற மாநில தமிழர்கள் எல்லாப் படங்களையும் பார்க்க முடியும். இது தவிர ONLINE. இதுவே இன்றைய அதிரடி திருட்டு நடக்கும் இடம்.

PEN DRIVE மூலமாக வைரஸ் போல இந்த திருட்டு பரவுகிறது. இதைக் கட்டுப்படுத்தி முறையே அனுமதியோடு, குறைந்த பணம் கட்டிப் பார்க்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது C2H இல். இளைஞர்களிடம் கேட்டுக் கொள்வது என்னவென்றால், உங்கள் வசதிக்காவே இந்த ONLINE இல் பார்க்கும் வசதி. படங்களைத் திருட்டுத்தனமாக ONLINEஇல் பிரைசியாக வெளியிடும் கூட்டத்தை அனுமதிக்காமல் இனி முறையாகப் பார்த்து மகிழுங்கள்.

உண்மைக்கும் உழைப்புக்குமான மரியாதையை வழங்குவதும், நீங்கள் இழப்பதாக நினைக்கும் பணத்தின் VALUEவை விட பல ஆயிரம் மடங்கு VALUEவுடன் முதலீடு செய்யப்பட்டு உருவாக்கப்படுவதே சினிமா. தயவு செய்து தவறுகளை அனுமதிக்காதீர்கள்.

எங்களது C2H NETWORK இல் எங்களது படங்களை உலகின் எல்லா நாடுகளிலும் பார்க்கலாம். அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப கட்டணங்கள் உள்லது. இந்த C2H நிறுவனம் ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும், ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஒரு மாற்று வியாபாரத்தளமாக இயங்கும். என் திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை என்ற சொல்லோ, திரைப்படம் எடுத்து எண்ணாற்ற நஷ்டம் என்ற சொல்லோ இனி இல்லை என்று இந்த C2H NETWORKஐ உருவாக்கிய திரைப்பட இயக்குநர் சேரன் சொல்கிறார். இந்த நிறுவனம் கடந்த 8 மாதங்களாக பல மாவட்டங்கள், பல ஆராய்ச்சிகள் செய்து, பல கலந்தாய்வு கேட்டம் நடத்தி இதை உருவாக்கியிருப்பதாகவும் சொல்கிறார் இயக்குநர் சேரன்.

Comments

comments


TAG