Search

உருளை கிழங்கு பொடிமாஸ்

வணக்கம்,

IMG_20181017_094604

உருளைகிழங்கு பிடிக்காதவங்களே இல்லைன்னு சொல்லலாம்,, ருசியான ஒரு கிழங்கு வகை. ஆனா, நிறையா பேருக்கு, வாய்வுன்னு சாப்பிட பயப்படுவாங்க. இப்படி உருளைகிழங்கை செய்தால், வாய்வு பிடிகாதுங்க.. இந்த பொடிமாஸ் சப்பாத்தி, ரொட்டிக்கும் நல்லாருக்கும். ரசம் சாப்பாட்டுக்கு செம்ம காம்பினேஷன்,,,,,

தேவையான பொருட்கள்:

  1. உருளைகிழங்கு – 3
  2. பெரியவெங்காயம் (நறுக்கியது) -1
  3. மிளகாய் – 2
  4. கறிவேப்பிலை – கைப்பிடி
  5. மஞ்சள் தூள் -1 சிட்டிகை
  6. மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  7. உப்பு – தேவைக்கு.

 

செய்முறை:

Step 1:

IMG_20181017_090046 IMG_20181017_090654

உருளைகிழங்கை குக்கரில், தண்ணீர் விட்டு 3 விசில் வரை வேக வைத்து, எடுத்து, தோலுரித்து வைக்கவும். பிறகு, அதை ஒன்றிரண்டாக மசித்து, உப்பு, மஞ்சள் தூள் மிளகாய் தூள் தூவி வைக்கவும்.

 Step 2:

IMG_20181017_090130 IMG_20181017_090228

பாத்திரத்தில், எண்ணெ ஊற்றி, கடுகு போட்டு பொரிந்ததும், கடலை பருப்பு, உளுந்து பருப்பு போட்டு சிவக்க வறுக்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, மிளாகாய் போட்டு நன்கு வதக்கவும்.

Step 3:

IMG_20181017_090726

இப்பொழுது, மசித்து வைத்த உருளைகிழங்கை போட்டு பிரட்டவும். மிதமான சூட்டில், ஒரு 2 நிமிடம் வதக்கியதும், எடுத்து பரிமாறவும்.

IMG_20181017_090950

சுவையான, உருளைகிழங்கு மசியல் ரெடி.

 

  • வசந்தி ராஜசேகரன்.