Search

மனித உரிமை பேசும் ‘யான்’

Yaan press meet

R.S.Infotainment சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கும் “யான்” படம்தான் அந்நிறுவனத்தின் பெரிய பட்ஜெட் படம். படத்தின் முதல் பாடலை கவிஞர் வாலி அவர்கள் எழுதியுள்ளார். உடல் நலம் சரியில்லாமல் வீட்டை விட்டு வெளியில் வருவதைத் தவிர்த்து வந்த வாலியை, அவரது வீட்டுக்கே சென்று ஹாரிஸ் ஜெயராஜ் பாடல் வரிகளை வாங்கியுள்ளார்.

ஹே லம்பா லம்பா
ஏன் வந்தாய் என் முன்பா
போட்டாலே பார்வையில்.. அம்பா

எனத் தொடங்கும் யூத்ஃபுல்லான பாடலை எழுதியுள்ளார் வாலி.

படத்தின் ஸ்க்ரிப்ட்டை இயக்குநர் ரவி.கே.சந்திரன் முதலில் அபிஷேக் பச்சனிடம்தான் கொடுத்துப் படிக்கச் சொல்லியுள்ளார். எனினும் தனக்கு நன்றாகத் தெரிந்த தமிழ் மொழியில்தான், முதற்படத்தை எடுக்க வேண்டுமென பிடிவாதமாக இருந்துள்ளார் ரவி.கே.சந்திரன். ‘நீங்க இரண்டு வேலை பண்ணணும்னு நினைச்சீங்கன்னா.. உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது’ என கே.வி.ஆனந்த் தான் ரவி.கே.சந்திரனுக்கு யோசனை அளித்துள்ளார். அந்த யோசனையின்படி, இரண்டு வருடம் எந்தப் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்யாமல், “யான்” படத்திற்காகத் தயாராகியுள்ளார் ரவி.கே.சந்திரன். கே.வி.ஆனந்த்தின் யோசனையால்தான் இயக்குநர் ஆனேன் என தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

ஜாலியான ஒரு பையன் ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறான். அதிலிருந்து எப்படித் தப்பிக்கிறான் என்ற எளிமையான் கதைதான். ஆனால் விஷூவலாக அசத்தியதோடு அல்லாமல், சர்வதேச அளவில் நடக்கக் கூடிய ஒரு மனித உரிமை பிரச்சனையைப் படத்தில் கையாண்டுள்ளாராம் ரவி.கே.சந்திரன். நாயகன் மோரோக்கோவிற்கு வேலைக்குச் செல்கிறான். தமிழ் சினிமா கண்டிராத பிரம்மாண்டமான க்ளைமேக்ஸை, ஹாலிவுட் படத்தில் வேலை செய்த மோரோக்கோ குழுவினருடன் இணைந்து படமாக்கியுள்ளனர்.

“யான்” – பிரஸ் மீட் ஸ்டில்ஸ்