Search
Aroll-corelli---Siragu

சிறகு விரித்த அரோல் கரோலியின் இசை

Aroll-corelli---Siragu

பர்ஸ்ட் காபி புரொடக்சன் சார்பாக மாலா மணியன் தயாரிப்பில் கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கி இருக்கும் படம் சிறகு. ஹரி கிருஷ்ணன் கதையின் நாயகனாகவும், அக்ஷிதா நாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நடிகர் நிவாஸ் ஆதித்தன், “என்னுடைய ஃபிலிம் கேரியரில் இது எனக்கு ரொம்ப முக்கியமான படம். இதற்கு மேல் இப்படியொரு படம் அமையுமான்னு தெரியல. இந்தப் படம் வெளிவந்த பின் எனக்கு ஒரு பெரிய வாழ்க்கை காத்திருக்கிறது” என்றார்.

டாக்டர் வித்யா, “23 வருசமா நான் மருத்துவரா இருக்கிறேன். ஆக்டிங் எனக்கு பெரிய பேஷன். எதாவது செஞ்சாகணும்னு உறுத்திக்கிட்டே இருந்தது. இந்தப் படத்துல ரொம்ப நல்ல கேரக்டர் பண்ணி இருக்கிறேன். தயாரிப்பாளர் மாலா மணியன் மேடம் எங்களை தன் ஃபேமிலி மாதிரி பார்த்துக்கிட்டாங்க. அதே மாதிரி தான் குட்டி ரேவதி மேடமும். இந்தப் படத்துல நடிச்சிருக்கோம் என்பதை விட எங்கள் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தி இருக்கோம். சிறகு உயரப் பறக்கும்” என்றார்.

ஹீரோ ஹரி கிருஷ்ணன், “ரொம்ப சந்தோஷமான தருணமா இருக்கு. இந்த டீம் ரொம்ப சூப்பரான டீம். குட்டி ரேவதி மேடம் தான் இந்த வாய்ப்பைக் கொடுத்தாங்க. பெண்கள் டீம் என்பதால் ரொம்ப பயந்தேன். ஆனா பெண்கள் தான் ஸ்ட்ராங் என்பதை உணர்ந்து கொண்டேன்” என்றார்.

இசையமைப்பாளர் அரோல் கரோலி, “சிறகு எனக்கு ஃபேவரைட்டான ஸ்கிரிப்ட். கதையைப் படிச்சதும் ஒரு பயணம் போன மாதிரி இருந்தது. குட்டி ரேவதி மேடம் எழுத்து எப்படி ஸ்ட்ராங் என்பது எல்லோருக்கும் தெரியும். கேமராமேன் பெரிய வித்தைக்காரர். கலக்கி இருக்கிறார். ஹரி கிருஷ்ணன் அவர் நல்லா கவனிக்க வைக்கிறார். இந்தப்வ்படம் நாம் இழந்த சில உணர்வுகளை வெளிப்படுத்தும். இந்தப்வ்படம் மூலமாக ஏ.ஆர் ரகுமான் சாரையும், மணிரத்னம் சாரையும் சந்தித்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்” என்றார்.

இயக்குநர் குட்டி ரேவதி, “நானும் தயாரிப்பாளர் அவர்களும் நிறைய பேசினோம். இரண்டு பேருக்கும் பிடித்தமான கதை தயாரான பின் தான் படத்தைத் துவங்கினோம். 30 நாள் படப்பதிவு நாட்கள். வாழ்க்கையில் மிக சந்தோஷமான நாட்கள். இந்த நாளில் இசையை வெளியிட வேண்டும் என்பது படப்பதிவுக்கு முன்பே திட்டமிடப்பட்டது. இந்தப் படத்தின் இரண்டு சிறகுகள் யார் என்றால் இசை அமைப்பாளரும் ஒளிப்பதிவாளரும் தான். அரோல் கரோலியோடு வேலை செய்யும் போது மிக மகிழ்வாக இருந்தது. ஒவ்வொரு பாட்டுக்கும் நிறைய ஆராய்ச்சி செய்து பாடல்களை உருவாக்கினார். ஏ.ஆர்.ரகுமான் அவர்களிடம் எதிர்பார்ப்பதை அரோல் கரோலியிடம் எதிர்பார்த்தேன். அதை அவர் செய்து தந்தார்.

ஒளிப்பதிவாளர் இந்தப் படத்தை ஒரு நகை வேலை செய்வது போல செய்திருக்கிறார். நடிகர் ஹரி கிருஷ்ணன். நாங்கள் நினைத்த ஒரே ஹீரோ அவர்தான். ஹீரோயின் அக்ஷிதா நின்னு விளையாண்டு இருக்கிறார். நிச்சயமாக இந்தப் படத்திற்குப் பிறகு அவர் நெடுந்தூரம் பயணிப்பார் என்று நம்புகிறேன். டாக்டர் வித்யா, நிவாஸ் ஆதித்தன் கேரக்டர்களை நீங்கள் திரையில் பார்த்துக் கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறேன். எனக்கு வாழ்வில் மிக முக்கியமான ஆட்கள் சிலர் இருக்கிறார்கள். அப்படி வரிசைப்படுத்தினால் அதை மாலா மணியன் அவர்கள் மூலமாகத் தான் துவங்க வேண்டும். சினிமாவில் இப்படியொரு ஆளைப் பார்ப்பது அரிது. இந்தப் படம் இருவரின் பயணம் தான். சரியாக திட்டமிட வேண்டுமென்பதையும் திட்டமிட்டபடி செயல்பட வேண்டும் என்பதையும் மாலா மணியன் அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம்” என்றார்.

படத்தின் பாடல்களைப் பத்திரிகையாளர்கள், தேவிமணி, திரைநீதி செல்வம், கவிதா ஆகியோர் வெளியிட்டார்கள்.