Search
bigg-boss-3-day-48

பிக் பாஸ் 3: நாள் 48 – ‘கை எப்படியிருக்கு முகின்?’

bigg-boss-3-day-48

ஆர்பாட்டமில்லாத கமலின் என்ட்ரியோடு டொடங்கியது. தன் ட்ரேட் மார்க் அறிமுக உரையுடன் வெள்ளிக்கிழமை நிகழ்வுகளுக்குக் கூட்டிச் சென்றார்.

மேயாத மான் பாடலுடன் தொடங்கிய நாளில் அந்தப் பாட்டுக்கு ஆடச்சொன்னால், எல்ல்/ஓரும் அவங்க பாட்டுக்கு ஆடிக் கொண்டிருந்தனர். சாண்டி எழுந்து வந்து ஸ்டெப் சொல்லிக் கொடுக்கும் போது பாட்டே முடிந்து விட்டிருந்தது.

ஷெரினின் உடல்நிலை சரியில்லாத நிலையிலும், சாக்ஷி அவரை டார்ச்சர் பண்ணியுள்ளார். அதை வருத்தத்டுடன் பதிவு பண்ணினார் ஷெரின். ‘ஆனால், சாக்ஷியே, இந்த நாளை உன் காலண்டர்ல குறிச்சு வச்சுக்கோ, நாளைக்கே நீ வெளியே போனாலும், முதல் ஆளா கண்ணீர் விடறதும், உண்மையா வருத்தப்படறதும் ஷெரின் மட்டும் தான். இதை நீ உணரும் போது ஷெரின் உன் பக்கத்துல இருக்க மாட்டார்’ என என் மைன்ட் வாய்ஸை இங்கே பதிந்து கொள்கிறேன். சேரன் சாக்ஷிக்காகப் பேசினார். இருந்தும் தலைவி அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

‘இந்த வாரம் நீ தான் வெளிய போறா மாதிரி என் ஞானக்கண்ல தெரியுது’ என சாக்ஷியிடம் கஸ்தூரி சொல்ல, அவங்களும் “புரிகிறது” டெம்ப்ளட் மோடில் தலையாட்டினார்.

காலை உணவுக்கே சிக்கன் சமைத்து அதை நன்றாகவும் செய்து ஹவுஸ்மேட்ஸ் மனசில் இடம் பிடித்துவிட்டார் மது. தர்ஷன், சாண்டி, கவின், முகின் ஆகியோர் நன்றாகச் சாப்பிடும் நபர்கள். மனசு விட்டு பாராட்டினதில் மது ஹேப்பி அண்ணாச்சி. ஒருத்தரோட இழப்பு இன்னொருத்தருக்கு லாபம் எனச் சொல்வாங்க. சரவணனும், ரேஷ்மாவும் வெளியே போனதால் மதுவுக்கு ஜாக்பாட் தான் இது. நாமினேஷனின் போது சோறு ஞாபகம் வந்தால் யாரும் மது பேரைச் சொல்ல மாட்டார்கள். கூடவே கஸ்தூரியை நக்கல் அடிக்கவும் மறக்கவில்லை.

பிரிஸ்மா லெக்கின்ஸ் நிறுவனம் வழங்கிய ஃபேஷன் ஷோ நடந்தது. அனைவருமே நன்றாக நடந்தனர். கஸ்தூரி தான் நடுவர். தர்ஷனும், சாக்ஷியும் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

ஹவுஸ்மேட்ஸ் எல்லோருக்கும் பிஸ்மா வழங்கும் கிஃப்ட் ஹாம்பர் பரிசாகக் கிடைத்தது (டியர் ஸ்பான்சர்ஸ் நானும் உங்க கம்பெனி பேர்லாம் தினம் பதிவுல எழுதறேன். இங்கேயும் எதையாவது அனுப்பி வைக்கவும்).

அகம் டிவி வழியே அகத்திற்குள்.

தெரிந்தோ தெரியாமலோ சில இடத்தில், ‘இவன் எல்லாம் தெரிஞ்சவன்’ என அவர்களே நினைத்துக் கொண்டு, நம் தகுதிக்கு மீறின முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால் அந்த மாதிரி கிடைக்கும் இடத்தில் ஓரளவுக்கு அமைதியாக இருந்து, அப்படியே சிரித்தவாறு சமாளித்துவிட்டு, அந்த மரியாதையை என்ஜாய் பண்ணிவிட்டு வெளியே வந்துவிடவேண்டும். அங்கே போய் மறுபடியும் நிரூபிக்க முயற்சி செய்தோமெனில், சாயம் வெளுத்துப் போய் அவமானப்பட வேண்டியிருக்கும். இந்த வீட்டில் கஸ்தூரிக்கு அது தான் நடக்கப் போகிறது. ஏதோ ஒரு விதத்தில், அவங்க மேல கான்டர்வர்சியான பிம்பம் இருக்கு. ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தான் அறிவாளி என நிரூபிக்க முயற்சி செய்து கொண்டே இருக்கார். சமரசிம்மா ரெட்டியிடம் மாட்டின விவேக் மாதிரி தான் வெளியே வரப்போகிறார்.

வீட்டில் இருக்கிற எல்லோரையும் பற்றிக் கேட்ட பொழுது சகட்டு மேனிக்கு உளறிக் கொண்டிருந்தார். கவினை சும்மா நோண்டிக் கொண்டே இருக்கிறார், லோஸ்லியாவை பேசா மடந்தை எனக் கிண்டல் செய்கிறார். தர்ஷனையும் ஷெரினையும் இணைத்துப் பேசுவது நாராசமாக இருக்கு. அடுத்த வாரம் நாமினேஷனுக்கு கஸ்தூரி பேர் வரும். கவின், சாண்டி, லியா, தர்ஷன், ஷெரின் இவங்க எல்லோரும் கண்டிப்பாக அவர் பெயரைச் சொல்வர்.

தர்ஷனையும் ஷெரினையும் ஹீரோவாகத் தேர்வு செய்த கஸ்தூரி, இரண்டு பேருக்கும் சேர்த்து மாலை போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் இரண்டு பேரும் சேர்ந்து மாலை மாற்றிக் கொள்ளவேண்டுமென உளறி வைத்தார். கடைசியில், கமலே காப்பாற்றியதற்கு தர்ஷன் நன்றி சொன்னார்.

‘கை எப்படியிருக்கு முகின்?’ எனக் கேட்டு அந்தப் பஞ்சாயத்துக்குக் கூட்டிக் கொண்டு போனார் கமல். அபிராமிக்கு நல்ல ஊமைக்குத்தாகக் குத்தி அனுப்பி விட்டார். அபிராமியைத் தாண்டி முகின் வெளியே தெரிவதில்லை. அதுதான் உண்மை. சேரனும் அதை தான் சுட்டிக்காட்டி பேசினார். முகினுக்கும் கரெக்டா அட்வைஸ் கொடுத்தார். எப்பவும் போல அபி அழுக ஆரம்பித்தார்.

மகாதேவன் CM