Search
Kolamaavu-Nayan

பாக்ஸ் ஆஃபீஸ் குயின் – கோலமாவு நயன்

Kolamaavu-Nayan

ஒரு நடிகைக்கான மிகப் பெரிய சாதனை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என அழைக்கப்படுவதோ, ‘பாக்ஸ் ஆஃபீஸ் குயின்’ ஆக இருப்பதோ இல்லை. ‘நாயகி மையப்படுத்திய படங்கள்’ என்ற வரையறையை அழிக்க வேண்டும். இத்தனை ஆண்டுகளாகவே ஒரு படத்தில் ஆண் நாயகன் இல்லாத போது, எளிதாக அதை நாயகி படம் என்ற வரையறைக்குள் கொண்டு வந்து விடுகிறோம். அந்தத் தடைகளை உடைத்து, உலகளாவிய பார்வையாளர்களைத் திரையரங்குகளுக்குக் கொண்டு வரும் வழிமுறை கடினமானதாக இருக்கிறது. நிச்சயமாக, நயன்தாரா இந்தச் சூழ்நிலையை உருவாக்க ஒரு மகத்தான முயற்சியை மேற்கொண்டார். அவருக்கு இருப்பது வெறும் சாதாரண ரசிகர்கள் மட்டுமல்ல, வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் தான் தமிழ் சினிமாவில் ‘கோலமாவு கோகிலா’வின் வெளியீட்டை வர்த்தகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

ஆகஸ்ட் 17ஆம் தேதி ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு, தனது முடிவில் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது. இயக்குநர் நெல்சன் கூறும்போது, “தயாரிப்பு மற்றும் விநியோக துறையில் லைக்கா புரொடக்ஷன்ஸ் மிகப்பெரிய நிறுவனமாகத் தங்களை நிரூபித்துள்ளது. ஒவ்வொரு படத்திற்கும் தயாரிப்பாளர்கள் எடுக்கும் முயற்சிகள் நம்ப முடியாதவை. மேலும், எந்த வியாபாரத்திலும் வெற்றி பெறும் ரகசியம், ‘சரியான நேரத்தில் சரியான இடத்தில் சரியான விஷயங்களை செய்வது’. லைக்காவிற்கு இவை மிகவும் பொருத்தமானவை. லைக்கா புரொடக்ஷன்ஸ், கோலமாவு கோகிலாவைத் தங்களது சிறப்பான விளம்பர யுக்திகளால் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார்கள். அது படத்துக்கு கூடுதல் மைலேஜாக அமைந்திருக்கிறது” என்றார்.

அனிருத் ரவிச்சந்தரின் மாயாஜால இசை படத்தின் எதிர்பார்ப்புகளை மிகப்பெரிய அளவில் ஏற்றி விட்டிருக்கிறது. குறிப்பாக, ‘கபிஸ்கபா’ என்ற விளம்பர ஜிப்பரிஷ் பாடல், படத்தை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்திருக்கிறது.