Search
JJ-biopic

டாக்டர் ஜெ.ஜெயலலிதாவின் சுய சரிதை திரைப்படமாகிறது

JJ-biopic

83 world cup, என்.டி.ஆர் சுய சரிதை ஆகிய படங்களைத் தயாரிக்கும் Vibri மீடியா நிறுவனம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் டாக்டர் ஜெ.ஜெயலலிதாவின் சுய சரிதை திரைப்படத்தைத் தயாரிக்கிறது

இந்திய அரசியல் வானில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு தலைவி இவர். ஆணாதிக்கம் நிறைந்த அரசியலில் ஒரு பெண் அரசியல்வாதியாக அவர் சாதித்த சாதனைகள் ஏராளம். அவருடைய சுய சரிதையைப் படமாக்குவத்தில் மிகுந்த பெருமை கொள்வதாக கூறுகின்றனர் vibri மீடியா நிறுவனத்தினர்.

“டாக்டர் ஜெ.ஜெயலலிதா மேடம் தேசிய அளவில் பிரசித்திப் பெற்றப் பிராந்திய தலைவர்களில் முக்கியமானவர். உலகெங்கும் உள்ள பெண்களுக்கு அவர் ஒரு முன்னுதாரணம். திரை துறையிலும், அரசியலிலும் அவர் புரிந்த சாதனைகளுக்கு இந்தப் படத்தை சமர்பிக்கிறோம். அவர் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி இந்தப் படத்தைத் துவக்க இருக்கிறோம். அன்றே ஃபர்ஸ்ட் லுக் கூட வெளியிட இருக்கிறோம்” என்கிறார் vibri மீடியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிருந்தா பிரசாத்.

தமிழில் பல்வேறு வெற்றிப் படங்களைத் தந்த இயக்குநர் விஜய் இந்தப் படத்தை இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்தப் படம் தயாராகிறது.

“எங்களது vibri நிறுவனத்துக்கு சுய சரிதைகளைப் படமாக்குவதில் மிகுந்த ஈடுபாடு உண்டு. இந்தக் கதைக்கான முன் தயாரிப்புப் பணிகளில் இயக்குநர் விஜய் ஈடுபட்டு வருகிறார்” என்கிறார் தயாரிப்பாளர் விஷ்ணு வர்தன் இந்தூரி.

தென்னிந்தியாவின் பிரதான நட்சத்திரங்களுடன், பிரபல பாலிவுட் நட்சத்திரங்களும் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளனர். Vibri media நிறுவனத்தினருக்கு இந்த வருடம் முக்கியமான வருடமாகும். பல்வேறு வெற்றிகரமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிப்ப்பதோடு, 83 உலக கோப்பை என்கிற ஹிந்திப் படத்தையும் கபீர் கான் இயக்கத்தில், ரன்வீர் சிங் கபில்தேவ் வேடத்தில் நடிக்கத் தயாரிக்கும் இந்த நிறுவனம், “என்.டி.ஆர் சுய சரிதை” திரைப்படத்தைப் பாலகிருஷ்ணா நடிக்க, கிரிஷ் இயக்கத்தில தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கூறிய அனைத்துப் படங்களும் 2019 ஆம் ஆண்டே வெளி வரும் என்பது உற்சாகமான சங்கதி.