Search
drug-usage---mothi-pa

ஆட்டிப் படைக்கும் போதைகள் – இயக்குநர் மோத்தி.பா

drug-usage---mothi-pa

மோத்தி ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் மோத்தி முகமது தயாரித்திருக்கும் படம் கோலா.

“போதை – இந்த இரண்டெழுத்து சொல்தான் வெகுகலாமாக இந்த உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதில் பல வகை உண்டு. பணக்காரப் போதை, அதிகாரப் போதை, பெண் போதை, மது போதை, கடைசியாகப் புகழ்ப் போதை. மனிதன் தன் கடைசி மூச்சு நிற்கும் வரை புகழ்ப் போதைக்கு ஆசைப்படுகிறான். அதை அனுபவிக்கவும் செய்கிறான். உலகத்திலுள்ள அத்தனை மனிதர்களும் ஏதாவது ஒரு போதையின் அடிமைகள்தான். விளக்கின் வெளிச்சத்தைத் தேடிச் சென்று விழும் விட்டில் பூச்சிகள் போல் சிலர் போதையில் சிக்கிக் கொள்கிறார்கள். உண்மையில் போதை என்பதே ஒரு மாயை தான். ஒரு வித தற்காலிகமான அமைதியை, இன்னும் சொல்லப் போனால் நம்மை ஆழமாகவோ, ஒரு முகமாகவோ சிந்தித்து முடிவெடுக்க விடாமல் செய்வதுதான் போதையின் முக்கியமான வேலை. இதை எத்தனையோ ஞானிகளும் மகான்களும் பல விதங்களில் எடுத்துச் சொல்லியும் கேட்பாரில்லை. இருந்தாலும் ஒரு சிலரின் காதில் விழுந்து கருத்தில் ஊன்றினால் அவர்களாவது போதையின் கொடூரப் பிடியிலிருந்து விடுபட்டு விட மாட்டார்களா என்ற நல்லெண்ணத்தில் உருவாக்கிய படம் தான் இந்த ‘கோலா’.

பாடகர்கள் கானா பாலா, அந்தோணி தாஸன், மகாலிங்கம் மூவரும் ஒரு பாடலுக்குப் பாடி நடனமாடி இருகிறார்கள். அந்த மூன்று பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். படம் விரைவில் வெளியாக உள்ளது” என்கிறார் இயக்குநர் மோத்தி.பா.

விக்கி ஆத்தியா, வைசாக் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகியாக ஹரிணி நடித்துள்ளார். மற்றும் மோத்தி முகமது, தருண் மாஸ்டர், பாபூஸ்,சந்தான லக்ஷ்மி, ஜீவா ரவி, ஜெய சுவாமிநாதன், கிருஷ்ணன், குமார், ஜெய்கணேஷ்,அமுதவாணன், ஜுங்கா பாலா, ஸ்ரீகோ உதயா ஆகியோர் நடித்துள்ளனர்.

>> தயாரிப்பு – மோத்தி முகமது
>> கதை திரைக்கதை வசனம் இயக்கம் – மோத்தி.பா
>> தயாரிப்பு மேற்பார்வை – லினா மோத்தி, எம்.எல்.பிஸ்மி
>> ஒளிப்பதிவு– கமில் ஜே.அலெக்ஸ்
>> இசை – கண்மணி ராஜா
>> பின்னணி இசை – எஸ்.எம்.பிரஷாந்த்
>> பாடல் – காதல் மதி, டாக்டர் கிருதியா, மோத்தி.பா
>> கலை – ராம்ஜி
>> படத்தொகுப்பு – தீபக்
>> நடனம் – ராதிகா