Search
Taapsee-Ghasi-fi

காஸி – நீர்மூழ்கி போர்க் கப்பலின் கதை

Ghazi Tamil movie

காஸி –  ஒரு போர்க்களத் திரைப்படமாக உருவாகியுள்ளது. பிப்ரவரி மாத வெளியீடாக வரவுள்ள இப்படத்தில் ராணா டகுபதி,டாப்ஸி பன்னு, நாசர்,கே.கே.மேனன்,அதுல் குல்கர்னி ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மறைந்த பழம்பெரும் நடிகரான ஓம்பூரி நடித்த கடைசி திரைப்படம் இது தான் என்பது பெருமைக்குரிய ஒன்றாகும். மிகப் பிரம்மாண்டமான படைப்பாக உருவாகி வரும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சங்கல்ப் இயக்கியுள்ளார்.

யாராலும் வீழ்த்த முடியாத நீர் முழ்கிக் கப்பலான PNS காஸியைப் பற்றி மிக ஆழமாகப் பேசும் ஒரு படைப்பாக இருக்கும். ஒளிப்பதிவாளர் மதி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தைத் தேசிய விருது வென்ற படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்ய, பல வெற்றி படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் கே இசையமைக்கிறார். எந்தவிதச் சமரசமுமின்றி பி.வி.பி சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை மிகப் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளது.

கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளிவந்த இப்படத்தின் ட்ரைலர், அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் அதிக அளவில் விரும்பிப் பார்க்கப்பட்டுள்ளது. இந்தியக் கடற்படையின் பொன் விழாவான இவ்வருடத்தில் இப்படம் வெளிவருவது கூடுதல் உவகையளிக்கும் விஷயம்.

பி.வி.பி சினிமாவும், மேட்ணீ எண்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து மூன்று மொழிகளில் வெளியிடுகின்றனர்.