Search
Rakshith-Shetty

“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி

Rakshith-Shetty

‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ முற்றிலும் ஒரு கற்பனையான கதை. அமராவதி எனும் ஒரு பழமையான கிராமத்தில், புதையல் ஒன்றுடன் தொடர்புடைய இன்றளவும் தீர்க்கமுடியாத, ஒரு மர்மத்தைத் தீர்க்கும் முயற்சியே இத்திரைப்படம். இப்படத்தைத் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் புஷ்கர் பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. இப்படம் தமிழில் வரும் ஜனவரி 3 ஆம் தேதி அன்று வெளியிடப்பட இருக்கிறது.

படத்தின் நாயகன் ரக்ஷித் ஷெட்டி, “எனது அம்மா ஒரு சிறந்த திரைப்பட ரசிகை. அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட நான்கு தென்னகத்து மொழிப் படங்களையும் பார்த்து ரசிப்பார். அதிலும் குறிப்பாக அவருக்கு பாலசந்தர் மற்றும் கமல் ஹாசனின் படைப்புகள் மிகவும் பிடிக்கும். அவரோடு சேர்ந்து தமிழ்ப் படங்களின் மீது எனக்கும் ஒரு பெரிய நன்மதிப்பும் மரியாதையும் உண்டு. மேலும் தமிழ்ப் படங்களில் கதையும், திரைக்கதையும் பலமாக இருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன். அதுவே என்னை ஒரு கதைக்குழு அமைத்திடத் தூண்டியது.

இப்படத்திற்கு கதை எழுதியிருப்பவர்கள் மிகச்சிறந்த செயல் திறன் படைத்தவர்களான ‘தி செவன் ஆட்ஸ் (The Seven Odds)’ குழுவினர். இக்குழுவில் என்னோடு சேர்ந்து சந்திரஜித் பெல்லியப்பா, அபிஜித் மகேஷ், சச்சின் (இயக்குநர்), அனிருத்தா கோட்கி, அபிலாஷ் மற்றும் நாகார்ஜுன் (பாடலாசிரியர்) ஆகியோர் உள்ளனர். ஏழு பேரைக் கொண்ட இந்தக் குழு தான் எனது அனைத்துப் படைப்புகளுக்கும் பக்கபலமாக இருந்து, பல அருமையான கதைகளை உருவாக்கி, அவற்றைப் பிரமிக்கத்தக்க திரைப்படமாக உருமாற்றி, அதை வெற்றிப்படங்களாக உயர்த்தி சாதனைப் படைத்து வருகிறது” என்றார்.

நடிகர்கள்:

>> ரக்ஷித் ஷெட்டி
>> ஷான்வி ஸ்ரீவஸ்தவா
>> பாலாஜி மனோகர்
>> பிரமோத் ஷெட்டி
>> மதுசூதன் ராவ்
>> அச்யுத் குமார்
>> கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே

தொழிட்நுட்பக் கலைஞர்கள்:

>> தயாரிப்பு – புஷ்கர் பிலிம்ஸ் புஷ்கரா மல்லிக்கார்ஜுனையா
>> கதை – தி செவன் ஆட்ஸ் (The Seven Odds)
>> ஒளிப்பதிவு – கரம் சாவ்லா
>> இசை – அஜநீஷ் லோக்நாத் & சரண்ராஜ்
>> கலை – உல்லாஸ் ஹைதூர்
>> நடனம் – இம்ரான் சர்தாரியா
>> சண்டைபயிற்சி – விக்ரம் மூர்
>> ஆடை வடிவமைப்பு – அருந்ததி அஞ்சனப்பா
>> வி.எஃப்.எக்ஸ், படத்தொகுப்பு, இயக்கம் – சச்சின்