Search
Koothan-producer

புதுமையான முறையில் டிக்கெட் விற்பனை – கூத்தன் தயாரிப்பாளர்

Koothan-producer

நீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மென்ட் தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும் படத்தின் பெயர் “கூத்தன்”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 3 அன்று நிகழ்ந்தது.

விழா மேடையிலேயே புதிதான முறையில் டிக்கெட் விற்பனை முறையை அறிமுகப்படுத்திப் பேசிய தயாரிப்பாளர் நீல்கிரிஸ் முருகன், “ஒரு மிகப்பெரும் பிரம்மாண்ட படத்தின் மூலம் என் மகனை அறிமுகப்படுத்தி ரசிகரகளைப் பிரம்மாண்டமான படம் பார்க்கும் உணர்வைத் தர நினைத்து இந்தப் படம் தயாரித்துள்ளேன். எந்த விசயத்திலும் ஏதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என நினைப்பவன் நான். தமிழ் நாட்டில் சின்ன படங்கள் ஓடுவது மிகப்பெரும் விசயமாகிவிட்டது. அதை மாற்றி இந்தப் படத்தை அனைவரிடமும் கொண்டு செல்லவும், இதை வெற்றிப்படமாக்கவும் டிக்கெட் முறையில் புதுமுறையை அறிமுகப்படுத்த உள்ளேன்.

ஒரு புதிய ஐடியாவாக படத்தின் டிக்கெட்டை நானே என் நண்பர்கள் மூலமாகவும் என் நலம் விரும்பிகள் மூலம் இந்த டிக்கெட்டை விற்பனை செய்ய உள்ளேன். இதற்கு எனது நண்பர்கள் அனைவரும் ஒத்துழைக்கிறார்கள். இந்த டிக்கெட்டை எடுத்துக் கொண்டு நீங்கள் தியேட்டர் சென்றால், ஒன்பது நாட்களில் எந்தத் தியேட்டர் செல்கிறீர்களோ அந்தத் தியேட்டரில் இந்தப் பட டிக்கெட்டைத் தருவார்கள். டிக்கெட் நீங்கள் தமிழ் நாட்டில் எங்கு வாங்கினாலும் எந்த விலைக்கு வாங்கினாலும் அதிக டிக்கெட் விலையுள்ள தியேட்டருக்கு நீங்கள் சென்றாலும் இந்த டிக்கெட் செல்லும். தியேட்டர்கள் ஒத்துழைப்புடன் இதை ஆரம்பித்திருக்கிறேன். ஒரு சின்னப்படத்தை 5 லட்சம் பேர் பார்த்தால் அது ஹிட் படம். இந்த மேடையிலேயே என் நண்பர்கள் மூலம் 20 லட்சம் ரூபாய் அளவுக்கு டிக்கெட்டை விற்கிறேன். இதை அவர்கள் சந்தைப்படுத்துவார்கள் . ஒவ்வொரு கட்டமாக இதை நடைமுறைப்படுத்துவேன். இதன் மூலம் பார்வையாளர்களை நேரடியாக நாங்கள் சந்தித்துத் தியேட்டருக்கு அழைத்து வருவோம். மேலும் படத்தையும் மிகப்பெரிய ஹிட் படமாக ஆக்குவேன். படத்தின் இசை விழாவிலேப டத்தின் விற்பனை தொடங்கியுள்ளது. இந்த முறை எல்லோராலும் இனி பின்பற்றப்படும்” என்றார்.