நேரம்: 3pm
நாளைக்குலாகூர்ல இருக்கும் இந்தியன் எம்பசிய டாலிபன்ஸ் தாக்க போறதா ஒரு ரகசியதகவல் வந்திருக்கு.அங்க நம்ம டீம் போய் கவர் பண்ணினா நல்லா இருக்கும் என்றார் Mr.வில்லியம்ஸ்.
சரி ஆண்டர்சன்,வேற யார அனுப்பலாம் லாகூர்கு ?
Mr.இக்பால்,சீனியர் ரிபோர்ட்டர். கடந்த 6 வருஷமா நம்மகிட்ட வொர்க் பண்றாரு.அனுபவமுள்ள ஆளு..அவர் போறது பெஸ்ட்னு தோணுது சார் என்றார் ஆண்டர்சன்.
சார் மன்னிக்கணும் இக்பால் ஒரு இந்தியர்,அவர இப்போ பாகிஸ்தான் அனுபறது நல்ல ஐடியாவா எனக்கு தோணலை என்றார் ஹென்றி.
ஆனா அவர் ஒரு முஸ்லிம் என்பதையும் நீங்க மறந்துட கூடாது Mr. என்றார் ஆண்டர்சன்.
சரி இப்போ அவர் எங்க இருக்காரு ?
காபுலில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்த கவர் பண்ணது அவரும் அவர் டீமும் தான்.இப்பவும் அங்க தான் இருக்கார் .
ஓகே. அப்போ அவர இன்னைக்கு ராத்திரிக்குள்ள லாகூர்க்கு கெளம்ப சொல்லிடுங்க..நாளைக்கு மார்னிங் அவர் ஸ்பாட்ல இருக்கட்டும்.
இடம் : லாகூர், காலை நேரம் 7.
ஹே எட்வார்ட்ஸ் சீக்கிரம் தயாராகு, நாம ஸ்பாட்ல இன்னும் 1 மணிநேரத்துக்குள்ள இருக்கனும். நீயும் உன் காமெராவும் இல்லாம நான் மட்டும்அங்க போய் தனியா என்ன பண்றது.. ஹரி அப் .
சரி சரி இக்பால் ஜஸ்ட் கிவ் மீ 10 மினிட்ஸ்.
காலை நேரம் 7.45.
இருவரும்தங்களுக்கு கொடுக்கப்பட்ட வாகனத்தில் சென்று எம்பசிக்கு முன் ஒரு இடத்தில் இறங்கினார்கள்.. அங்கே இருந்த டி கடையில் அமர்ந்துபேசிகொண்டிருந்தார்கள்.
காலை நேரம் 9.15.
திடிரென்றுபாகிஸ்தான் ராணுவப்படை வந்து இந்திய எம்பசிக்கு முன் குவிந்தது,தங்களுக்கு கிடைத்த தகவல் உண்மை என்பதை உறுதிபடுத்தியது .
இக்பால்உடனே லண்டனை தொடர்பு கொண்டு விஷயத்தை கூறினார்.அவர்கள் மேலும் நடப்பதைமுழுவதுமாக கண்காணித்து செய்தியை சேகரிக்குமாறு அறிவுரிதினார்கள்.
திடிரென்று அங்கே இரண்டு வாகனத்தில் வந்த
அதை கவர் செய்துகொண்டிருந்தது எட்வர்ட்ஸின் கேமரா.
போராட்டத்தில்மக்களுடன் மக்களாக தீவிரவாதிகளும் இணைந்து கொண்டார்கள். இந்திய தூதுரகம்நோக்கி சென்றவர்கள்,இந்தியாவை எதிர்த்தும் பாகிஸ்தான் ராணுவத்தைஎதிர்த்தும் கோஷங்கள் எழுப்பி கொண்டிருக்க, ஒரு சிலர் இந்திய நாடு கொடியைதீயிட்டனர்.
அதை கண்டு தன்னையும் மறந்து உணர்ச்சிவசப்பட்டு இக்பால் அதை அணைக்க முற்பட்டார்.
அதை கண்டு எரிச்சல் கொண்ட தீவிரவாதிகள் அவரை அங்கேயே தலையில் சுட்டு கொன்றனர்.
பிறகு தடி அடி நடத்தியும் துப்பாக்கி சூடு நடத்தியும் மக்களை கலைத்தனர். மக்களுடன் மக்களாக தீவிர வாதிகளும் கலைந்துசென்றனர்.
இக்கட்டான சூழ்நிலையில் பி பி சி நிறுவனமும், இந்திய அரசும் பாகிஸ்தான்நாட்டின் உதவியுடன் இக்பாலின் உடலை அவரது சொந்த ஊரான தமிழ்நாட்டை சேர்ந்தராமநாதபுரத்துக்கு கொண்டு வந்தனர். அங்கே அவரது உடன் தகனம் செய்ய பட்டது.
“மதத்தையும் மீறியது தேச பற்று.”