Shadow

அசத்தலான ஆண்ட்ராய்ட் செயலி – Air Droid (ஏர்-ட்ராய்ட்)

Airdroid Apps

ஸ்மார்ட் ஃபோன்களின் வளர்ச்சியும் தீவிரமும் இன்னதெனத் தீர்மானிக்க முடியாத எல்லைகளை எல்லாம் கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. கையகல ஸ்மார்ட் ஃபோன் மூலமாக நமது அன்றாடப் பணிகள் தொடங்கி நமது எல்லாவிதமான தேவைகளையும் விரல் நுனியில் பெற்றுக் கொள்ளக் கூடிய வசதி வாய்புகளை இந்த ஸ்மார்ட்ஃபோன் செயலிகள் (ஆப்ஸ்) நமக்குத் தருகின்றன.

விண்டோஸ், ஆப்பிள், ஆண்ட்ராய்ட் என மூன்று விதமான இயங்கு தள அலைபேசிகளுக்கென விதம்விதமான செயலிகள் இருந்தாலும், கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் செயலிகளே அதிக அளவில் பிரபலமாய் இருக்கின்றன. அந்த வகையில் ஆண்ட்ராய்ட் அலைபேசிகளுக்கான வெளியாகி உள்ள ஒரு புதிய செயலியான ஏர்ட்ராய்ட் பற்றிப் பார்ப்போம்.

AirDroid ஏர்ட்ராய்ட் செயலிகணினியில் இருந்தபடியே நம் மொபைல் போன்களை கையாளுவது என்பது ஒரு கட்டத்தில் சாத்தியமே இல்லை என்றிருந்த நிலையை எளிதாக்கியிருக்கிறது ஏர்ட்ராய்ட் செயலி. நமது கணினியில் இருந்து கொண்டே நமது மொபைல் ஃபோனில் உள்ள அத்தனை அப்ளிக்கேஷன்களையும் இயக்கவும், பார்வையிடவும் வசதியேற்படுத்தித் தருகிறது ஏர்ட்ராய்ட். அந்த வகையில் இந்த புதிய முயற்சி ஆன்ட்ராய்ட் பயனர்களின் மிக விருப்பமான மென்பொருளாகி இருக்கிறது ஏர்-ட்ராய்ட் (AirDroid).

கணினி ப்ரெளசரில் இருந்து கொண்டே கணினியின் கோப்புகளை, உரலிகளை, ஃபோன் தொடர்புகளை மொபைலுக்கு நினைத்த மாத்திரத்தில் ட்ரான்ஸ்ஃபர் செய்ய முடியும். இதைப் போலவே மொபைல் ஃபோன் தகவல்களை எளிதில் கணினிக்குக் கொண்டு வந்துவிடலாம்.

தற்போது வெளியாகி உள்ள ஏர்ட்ராய்டின் 3ஆம் பதிப்பு, முந்தைய பதிப்புகளில் இருந்த குறைகளை நீக்கிய மேம்படுத்திய ஒரு செயலியாக வெளிவந்திருக்கிறது. இந்த செயலியில் உள்ள ஏர்மிரர் (AirMirror) என்னும் புது வசதியின் மூலம் மொபைலை கையில் தொடாமலேயே வாட்ஸ்-அப்பை கணினியில் இருந்தே உபயோகிக்க இயலும். கணினியில் இருந்தே உங்க மொபைலின் கோப்புகளைப் பார்க்கலாம்; புகைப்படங்களைப் பார்க்கலாம்; ஸ்க்ரீன்-ஷாட் எடுக்கலாம்; ரிங்-டோனை கூட மாற்றிக் கொள்ளலாம்.

இது ஒரு இலவச மென்பொருள் என்பது கூடுதல் சிறப்பு. கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாகத் தரவிறக்கலாம். கணினிக்குத் தேவையான மென் பொருளை ஏர்-ட்ராய்டின் தளத்தில் இருந்து நேரடியாக கணினியில் தரவிறக்கிக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு..

– சிம்ம வாகனி