ஹாலிவுட்டில் தயாராகும் ஆக்ஷன் படங்களுக்கு, நம் நாட்டில் எப்போதுமே தனியொரு வரவேற்பு உண்டு. இப்படங்கள், மாநில மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகும் போது, வரவேற்பு இரண்டு மடங்காகும்! PVR பிக்சர்ஸ், ‘பாயிண்ட் பிரேக்’ படத்தை தமிழிலும் அதே தலைப்புடனே, ‘அச்சம் தாண்டி சிகரம் தொடு’ என்கிற பின்குறிப்புடன் வெளியிடுகின்றனர்.
கேத்ரீன் பிக்லோ இயக்கத்தில், கீனு ரீவ்ஸ் நடித்து 1991இல் வெளிவந்த ‘பாயிண்ட் ப்ரேக்’ படத்தில் சில புதிய மாற்றங்கள் செய்து, அப்படத்தின் மறு அவதாரமாக இப்படத்தைக் கொண்டு வந்துள்ளனர். இதில் இன்னொரு சுவாரசியமான விஷயமெனில், கதாபாத்திரங்களின் பெயர்கள் இந்து மதப் பெயர்கள் உள்ளன. மேலும், ஒரு வைரக் கொள்ளைக் காட்சியொன்றை மும்பையில் படமாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் இடம்பெறும் வீர விளையாட்டுகளில், சம்பந்தப்பட்ட துறையின் நிபுணர்களும் தோன்றி நடித்துள்ளனர்.
ஏகத்துக்கு எதிர்பார்ப்புகளை உருவாக்குகின்றனர்.