Search

அன்பானவர்களுகாக

என்னுடைய பலவீனங்களின்
மீது யாரும் கல்லெறியாதீர்கள்
கோபத்தில் நான்
வசைகளை அடுக்கியே
பழக்கப் பட்டவன்.
அதனால்
உங்கள் செயல்களுக்கு
ஈடாக என்னால் வேறெதையும்
தரமுடியாது

சன்மானம் பெற நீங்கள்
தயாரென்றால்
பிரதியுபகாரமாக
கொட்டிக் கொடுக்க காத்திருக்கிறேன்
எந்நேரமும் எந்த இடத்திலும்

எனக்கு அன்பானவர்களும்
அதில் சிலநேரம் மாட்டிக்கொள்வதை
என் மனம் எப்படி ஏற்கும்
பதிலுக்கு நான்
உங்களுக்காகவே வார்த்தையொன்று
தயாரித்து வைத்திருக்கிறேன்
உங்களிடம் தனியாக சொல்கிறேன்
இப்பொழுது வேண்டாம்
நேரம் வரட்டும்

– சே.ராஜப்ரியன்




Leave a Reply