AVA புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக ஏ.வி.அனூப் தயாரிக்கும் படம் “என்ன சத்தம் இந்த நேரம்”. இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக அல்லயன்ஸ் பிக்சர்ஸ் புரொடக்சன்ஸின் கிருஷ்ண பலராம ராஜா பணியாற்றியுள்ளார்.
அறிமுக இயக்குநர் குரு ரமேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். பிரபல இயகுநர் ராஜா, மானு நிதின் சத்யா, மாளவிகா மற்றும் பலர் நடித்து விரைவில் வெளிவரவிருக்கிறது.
இப்படத்தின் சிறப்பம்சம் யாதெனில், ஒரு பிரசவத்தில் பிறந்த நான்கு பெண் குழந்தைகளான அதிதி, அக்ரிதி, ஆப்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
திராவிட முன்னேற்ற கழக தலைவரான கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்திற்கு நான்கு குழந்தைகளையும் அழைத்து தனது வாழ்த்தினைத் தெரிவித்தார்.
மேலும், குழந்தைகளின் பெயர்களைக் கேட்டறிந்த கலைஞர் அவர்களுக்கு அழகு தமிழில் பெயர் சூட்ட விரும்பி முறைப்படி அதிதிக்கு மல்லி என்றும், அக்ரிதிக்கு முல்லை என்றும், அக்ஷிதிக்கு ரோஜா என்றும், ஆப்திக்கு அல்லி என்றும் பெயர் சூட்டினார்.
தனது குழந்தைகள் கலைஞரிடம் வாழ்த்துப் பெற்றதையடுத்து பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்தனர். சமீபத்தில் வெளியான “என்ன சத்தம் இந்த நேரம்” படப் பாடலும், படத்தின் முன்னேற்றமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அழகு குழந்தைகளின் அமர்க்களமான நடிப்பை விரைவில் திரையரங்குகளில் பார்க்கலாம்.