வழக்கம் போல் ‘எக்ஸ்பேண்டபிள்ஸ்’ படத்தின் மூன்றாம் பாகமும் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிகச் சிறந்த ஆக்ஷன் ஹீரோக்களில் ஒருவரான சில்வஸ்டர் ஸ்டலோன் உருவாக்கியுள்ள இப்படத்தில், அர்னால்ட் ஸ்வாஸ்னேகர், மெல் கிப்ஸன், ஹாரிசன் ஃபோர்ட் போன்ற பல பிரபலமான நட்சத்திர ஆக்ஷன் ஹீரோக்கள் ஸ்டலோனோடு அணிவகுத்துள்ளனர.
“ஆக்ஷன் ஹீரோக்கள் அழகானவர்களாக இருக்க வேண்டுமென்பதில்லை! ஏன், பெரிதான அளவில் உடற்கட்டு அமைந்திருக்க வேண்டும் என்கிற கட்டாயம் கூட கிடையாது.
ஆரம்ப நாட்களில் நானும் அர்னால்ட்டும் போட்டியாளர்களாக ஒருவரையொருவர் நினைத்திருந்தோம்! பகைவர்களைப் போலத்தான் நடந்து கொண்டோம். வயதாகி, காலம் மாறிய பிறகு, நேசத்தோடு பழகி, படங்களிலும் இணைந்து பணியாற்றத் தொடங்கினோம். எனது திரையுலக வளர்ச்சிக்கு, தெரிந்தோ தெரியாமலோ அர்னால்ட் ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளார்” எனச் சிரிக்கிறார் ஸ்டலோன்.