Shadow

ஆண் பாதி பெண் பாதி

Arthanaari Movie

கிருத்திகா பிலிம் கிரியேஷன் சார்பில் ஏ.எஸ்.முத்தமிழ் என்பவர் கதை எழுதித் தயாரிக்கும் படம் அர்த்தநாரி. இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பாரி வேந்தர் பாடல்களை வெளியிட, மைக்ரோசாஃப்ட் நிறுவன முன்னாள் தலைவர் ரங்க பாஷ்யம் மற்றும் நடிகர் சங்கத் தலைவர் நாசர், பழம்பெரும் தயாரிப்பாளர் கோவை தம்பி ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள் . படத்தின் டிரைலர் ஒரு அண்டர்கவர் பெண் போலீஸ் அதிகாரியின் நடவடிக்கைகளைப் பற்றியதாக இருந்தது .

நாயகன் ராம்குமார் பேசும்போது, “நடிகனாவேன் என நினைக்கலை. மாடலிங்கில் இருந்தப்ப நான் பண்ண விளம்பரம் ஒன்னு சத்யம் தியேட்டர்ல வந்துச்சு. அதைப் பார்த்துட்டுத்தான் தயாரிப்பாளர் முத்தமிழ் என்னிடம் கேட்டார். ஐ.டி.யில் வேலை செய்துட்டிருந்தேன். வேலையை விட்டுட்டு என்ன பண்ணலாம்.. ஃபோட்டோகிராஃபி அது இதுன்னு குழப்பிட்டு இருந்தேன். அப்பத்தான், ‘உங்க மேல் கான்ஃபிடண்ட் இருக்கு’ன்னு சொல்லி நடிக்க வச்சார். எது பண்ணாலும் முழு ஈடுபாடோடு செய்னு வீட்டில் சொன்னாங்க. முதல் நாளில் இருந்து ஒன்னுன்னா கத்துக்கிட்டிருக்கேன்” என்றார்.

“எனக்குள் ஒரு திறமை இருக்கு, நடிக்க முடியும்னு முதன்முதலில் சொன்னத் நாசர் சார் தான். முதன்முதலில் அவர் தான் மோகன்லால் கூட ஒரு வசனம் பேசுறாப்ல நடிக்க வாய்ப்புக் கொடுத்தார். அவர் கூட நடிக்கணும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை. அது இந்தப் படத்தில் நிறைவேறியிருக்கு” என்றார் மகிழ்ச்சியுடன் சிவசங்கர் மாஸ்டர்.

“அர்த்தநாரி. ஆண் பாதி; பெண் பாதி. இது நல்ல சமயத்தில் வந்திருக்கிற படம். எங்க கட்சிதான் முதன்முதலில் பெண்களுக்கும் ஐம்பது சதவிகிதம் வேணும்னு கேட்டோம். என்னை எல்லா விஷயத்திலும் அப்படியே பின்பற்றும் முத்தமிழ், இந்தப் படத்தில் வெற்றி பெற்று நிறைய படங்களை எடுக்க” என வாழ்த்தினார் பாரிவேந்தர்.

நாசர் பேசும்போது, “படத்தின் ட்ரெயிலரும், பாடல்களும் பார்க்கும் போது, இது ஏதோ லவ் படம் போல் தெரியுது. ஆனா படத்தில் அழுத்தமான மெஸ்சேஜ் இருக்கு. படிக்கிற வயதில் வேலைக்குப் போகும் குழந்தைத் தொழிலாளிகள் பற்றி இந்தப் படம் பேசுது” என்றார் நாசர்.

இப்படத்தை இயக்கியிருக்கும் சுந்தர இளங்கோவன், இயக்குநர் பாலாவிடம் இயக்குநர் பாலாவிடம் அசோசியேட் இயக்குநராகப் பணியாற்றியவரென்பது குறிப்பிடத்தக்கது.