
தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் சமீபமாக எல்லா புகழும் ரஹ்மானுக்கே என்று சொல்லி கொண்டு இருக்கிறார் . மரியான் படத்தின் இசை கடந்த சில வருடங்களாக தமிழ் திரை உலகம் கேட்டிராத மாபெரும் இசையாகும்.இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க உரியவர் A.R .ரஹ்மான் மட்டும் தான் . இதை தவிர படத்தின் பின்னணி இசை கோர்புக்காக இரவு பகலாக அயராது உழைத்து தன்னுடைய வெளிநாட்டு இசை நிகழ்சிகளையும் ஒத்தி வைத்து இதுதான் தன்னுடைய முதல் படம் போல் பாவித்து பணி புரிவதை பார்க்கும் போது பிரமிப்பு அடைந்தேன். வெறும் திறமை மட்டும் நம்மை உச்சத்தில் உட்கார வைக்காது அதற்குரிய உழைப்பும் தொழில் பக்தியும் வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் A.R.rahmaan தான் என்று கூறுகிறார் ஆஸ்கார் ரவிச்சந்திரன் .