Shadow

இசையமைப்பாளராகிறார் சூப்பர் சிங்கர் ‘ப்ரவீன் சாய்’

Praveen Sai

நம் அனைவருக்கும் இன்னொரு முகம் இருக்கும். சூழ்நிலைகளுக்குத் தகுந்தாற்போல் நல்ல முகமோ கெட்ட முகமோ வெளிப்படும். அப்படித் தேவைக்கேற்ப முகத்தைக் காட்டுபவன்தான் “மறுமுகம்” படத்தின் நாயகன். இப்பொழுது ட்ரெண்டில் இருக்கும்  ‘சைக்கலாஜிக்கல் த்ரில்லர்’ வகையைச் சார்ந்ததுதான் இப்படமும்.

‘ஊமை விழிகள்’ படத்திற்குப் பிறகு ஃப்லிம் ஸ்டூடண்ட்ஸ் மாணவர்கள் இணைந்து உருவாக்கும் படம். படத்தின் இயக்குநரான கமல் சுப்ரமணியம் திரைப்படக் கல்லூரி மாணவர். படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கும் டேனியல் பாலாஜி அவருக்கு கல்லூரியில் சீனியர். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சன்ஜய் டாங்கி.

“திரைப்படக் கல்லூரியில் இருந்துவரும் ஒவ்வொருவருக்கும் விஜயகாந்தை வைத்து இயக்குவதுதான் கனவாக இருக்கும். கல்லூரியிலிருந்து வெளியே வந்ததும், அவர் அலுவலகம் இருக்கும் ராஜாபாதர் தெருதான் அவர்கள் செல்லும் முதலிடமாக இருக்கும். திரைப்பட கல்லூர் மாணவர்கள் பலரையும் இயக்குநர் ஆக்கியவர் விஜயகாந்த். அப்போது நான் தயாராக இல்லாததால் அவரை இயக்கமுடியவில்லை. இப்ப நான் தயாராக இருக்கும்பொழுது, அவர் அரசியலில் பிசியாகிட்டார்.” என்றார் இயக்குநர் கமல் சுப்ரமணியம்.

டேனியல் பாலாஜிதான் படத்தில் சைக்கோ கில்லரா என்ற கேள்விக்கு, “டேனியல் பாலாஜினாவே அந்த மாதிரி ரோல்தான்னு பொதுவான எண்ணமாக இருக்கு. இந்தப் படத்தில் அவர் சைக்கோவும் இல்லை, கில்லரும் இல்லை. இப்படம் ஒரு எமோஷனால் த்ரில்லர்” என்றார் இயக்குநர்.

“நான் ஆங்கிலப் படங்களை வாங்கி சில ஏரியாக்களில் மட்டும் விநியோகம் செய்வேன். இந்தப் படத்தையும் சில ஏரியாவில் மட்டும் வெளியிடம் யோசனையில்தான் போனேன். ரெண்டு மணி நேரம் அஞ்சு நிமிஷப் படம் அரை மணி நேரத்தில் முடிஞ்சாப்ல ஸ்பீடாகவும், த்ரில்லிங்காகவும் இருந்தது. நான் தமிழ்நாடு முழுவதும் விநியோகிக்கும் முதல் தமிழ்ப்படம் இது. அந்த அளவுக்கு திறமையாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர்” என்றார் படத்தின் விநியோகஸ்தரான ‘ஸ்டாட் ஸ்டூடியோ’ N.விஸ்வாமித்திரன்.

படத்தில் இரண்டு பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியுள்ளார் சூப்பர் சிங்கர் புகழ் ப்ரவீன் சாய். “எல்லோருக்கும் நான் பாடுவேன் மட்டுந்தான் தெரியும். ஆனா எனக்குள்ள இருக்கிற இசை ஆர்வத்தைக் கண்டுபிடிச்சு வாய்ப்புக் கொடுத்த இயக்குநருக்கு ரொம்ப நன்றி” என்றார் ப்ரவீன்.