சந்தானம் கதாநாயகனாக நடிக்கும், ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடந்தது. படப்பிடிப்பு முடிவடைய இருப்பதால், அதைக் கொண்டாட நினைத்த படக்குழுவினருக்கு இன்னொரு கொண்டாட்டத்துக்கான காரணம் காத்திருந்தது . மூத்த ஸ்டுன்ட் இயக்குநர் விஜயன் மாஸ்டரின் பிறந்த நாள் கொண்டாட்டம் தான் அது.
பட்டு வேட்டி சட்டையில் சந்தானமும், பட்டுப் புடைவையில் கதாநாயகி ஆஷ்ணா சாவேரியும் ஒரு விசேஷதுக்கான உடையில் வலம் வந்தனர்.
அதிரடிக் காட்சிகளில் பஞ்ச் அடிக்கும் விஜயனின் பிறந்த நாளை சிரிப்பு சரவெடியில் பஞ்ச் அடிக்கும் சந்தானம் கொண்டாடியதை விஜயன் மாஸ்டர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். காதல் காட்சிகளில் மட்டுமின்றி , அதிரடி சண்டை காட்சிகளில் கூட சோபிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உள்ள சந்தானம் கொண்டாட இதை விட வேறு தருணமோ , வேறு சரியான காரணமோ கிடைக்காது.