
மனம் கவரும், இளமை தளும்பும், தொழில் நுட்பத்தில் முத்திரை பதிக்கும் தரமான படங்களை மிகப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் ஆர்.எஸ்.இன்போடைன்மென்ட் நிறுவனம், விண்ணை தாண்டி வருவாயா, கோ, முப்பொழுதும் உன் கற்பனைகள், நீதானே என் பொன் வசந்தம் ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது ரவி. கே.சந்திரன் இயக்கத்தில் ஜீவா ஜோடியாக துளசி நடிக்கும் ‘யான்’ படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறது. தலைப்பில் மட்டுமின்றி படத்தின் தரத்திலும் வித்தியாசமாக இருக்க முனையும் இந்த நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு ‘இல்ல ஆனாலும் இருக்கு’.
நகைச்சுவை கலந்த திகில் படமான ‘இல்ல ஆனாலும் இருக்கு’ திரைப்படத்தில் 15 புதிய தொழில் நுட்ப கலைஞர்கள் அறிமுகமாக உள்ளனர்.

‘ஒரே படத்தில் இவ்வளவு கலைஞர்களை அறிமுகப்படுத்துவது மிகவும் பெருமைக்குரியது. இவர்கள் எல்லோருமே நிச்சயமாகத் திரையுலகில் பிரகாசமாக ஒளி வீசுவர். உத்தர்காண்ட் மாநிலத்தில் உள்ள நைனிடால் என்ற ஊரில் படமாக்கப்படும் இந்தப் படத்தின் கதைக்கு , அந்த ஊரின் பின்னணி மிகவும் பலம் சேர்க்கக்கூடும். இடைவிடாமல் 50 நாட்களுக்கு மேல் படமாக்க பட உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது 20 நாட்கள் முடிவடைந்து உள்ளது. தெளிவான திட்டமிடுதல் மற்றும் நேர்த்தியாக இயக்கம் மூலம் ஓர் அனுபவசாலியான இயக்குநர் போல் இயங்கும் டீகே, இயக்குனர் கே.வி.ஆனந்த் அவர்களிடம் பணி புரிந்தவர். இந்தப் படம் எங்களது தயாரிப்பு நிறுவனத்தின் மிக முக்கிய படமாக திகழும்’ என தயாரிப்பாளர்கள் எல்ரெட் குமாரும் ஜெயராமும் தெரிவித்தனர்.
பணிக்குழு:
>> தயாரிப்பு – எல்ரெட் குமார் & ஜெயராம்
>> இயக்குநர் – டீகே
>> ஒளிப்பதிவு – ராமி
>> இசை – எஸ்.என்.பிரசாத்
>> படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத்
>> சண்டை – திலீப் சுப்பராயன்
>> நடனம் – விஜய் சதீஸ்
>> பாடல் வரிகள் – ஸ்ரீகாந்த் வரதன்
>> உடை – வீணா சங்கரநாராயணன்
>> டிசைன்ஸ் – அசோக் வரதன்
>> ஸ்டைலிஸ்ட் – லலிதா ராஜமாணிக்கம்