Shadow

இளவரசி ஹன்சிகா!

Pretty Hansika

தனது வசீகரத்தால் இளைய உள்ளங்களின் மனதைக் கவர்ந்திருந்தாலும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் மனப்பான்மை மூலம் எல்லோருடைய அன்பையும் ஈன்றவர் ஹன்சிகா. அவர் பிறக்கப் போகும் 2015 ஆம் ஆண்டை எண்ணி மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார். ஏனெனில் அடுத்த வருடம் தனக்கு மிகவும் பொன்மயமாக அமையும் என்ற அவரது நம்பிக்கையே மகிழ்ச்சித் திளைப்பிற்குக் காரணம்.

அரண்மனை படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் பெற்றுத் தந்த விசாலமான இடத்தை, இந்த ஆண்டு டிசம்பரில் வெளிவரவிருக்கும் “மீகாமன்” படம் தக்க வைக்க உதவுமென நம்பிக்கையுடன் இருக்கிறார். ஹாலிவுட படத்துக்கு இணையான அப்படத்தில், ஆர்யாக்கு நிகரான பாத்திரத்தில் நடித்துள்ளதே அவர் மகிழ்ச்சிக்கு காரணம். நடிக ஜெயப்ரதாவின் மகன் சித்துவுக்கு ஜோடியாக நடிக்கும் ‘உயிரே.. உயிரே..’ படத்தில், அவரது வயதுக்கும் துள்ளலுக்கும் ஏற்ப பப்லியான பாத்திரத்தில் வருகிறார்.

2015 பொங்கல் நாளன்று வெளியாகும் விஷாலின் ‘ஆம்பள’ படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். தனது நட்சத்திர அந்தஸ்த்தாக ஏற்ற படமாக இருக்குமெனச் சொல்கிறார். அதன் பின், அவர் மிகவும் எதிர்பார்க்கும் படமான ‘வாலு’வும் வெளியீட்டுக்குத் தயாராகக் காத்துள்ளது. அதில் அவருக்கு மிகத் துடிப்பான வலிமையான கதாபாத்திரமாம்.

இந்த மகிழ்ச்சிக்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல், சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பெயரிடப்பாத அந்தப் பிரம்மாண்டமான படத்தில் இளவரசி பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பதே! இதற்குக் காரணம் அதிர்ஷ்டம் என பலரும் கூறுகையில், கடின உழைப்புடன் விடா முயற்சியும் இருந்தால் வெற்றி கிட்டும் என்கிறார் ஹன்சிகா.

“என்ன நடந்தாலும், நான் என் கடமையில் கண்ணாக இருப்பேன்” என்பதுதான் ஹன்சிகாவின் புன்னகைக்கு பின்னுள்ள வெற்றி ரகசியம்.