விஜய் சேதுபதி , சிவ கார்த்திகேயன் , அதர்வா, விக்ரம் பிரபு என்ற தன்னுடைய சக வயது நடிகர்களை சிலாகித்துப் பாராட்டிப் பேசுகிறார் ஆதி.
“அவர்களுடைய வெற்றி என்னைப் போன்ற மற்ற நடிகர்களுக்கு ,எங்களது நேரம் வரும் போது நல்ல கதைகள் கிட்டக் கூடும் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறது .இது என் தாய் எனக்கு கற்று தந்த பாடம். இவ்வுலகில் எல்லோருக்கும் இடம் உண்டு என்பது தாரக மந்திரம் போல் சொல்லியே வளர்த்தார். அந்தப் பாடமே என்னை வெற்றியிலும் தோல்வியிலும் ஒரே மாதிரியான மன நிலையில் நிதானமாக செயல் பட வைக்கிறது” என் கிறார் ஆதி.
இந்த மனநிலைக்கு அவரது சகோதரர் சத்யா பிரபாஸ் இயக்கத்தில் உருவாகும் ‘யாகாவாராயினும் நா காக்க‘ படத்தின் தலைப்பும் காரணமாக இருக்குமா என்றக் கேள்விக்கு ,’இருக்கலாம்.. இந்தப் படம் நிச்சயமாக என் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்லாக இருக்கும்” என்றார்.
கோச்சடையான் படத்தின் சரித்திர கால வசனங்களுக்காக மெனக்கெட்டுப் பயிற்சி செய்து வரும் ஆதி, இந்த அனுபவம் தமிழ் மொழி மேல் தனக்கு உள்ள அபிமானத்தை கூட்டி இருப்பதாக கூறினார்.
“இந்தப் படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிப்பது ஒரு வரம் என்று சொல்ல வேண்டும். 2013 ஆம் வருடத்தின் பிற்பகுதி நிச்சயம் எனக்கு பொற்காலமாக இருக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.