Search

உணர்ச்சிகள்

 

உடலும், மனமும் வெளிப்படுத்தும் தெரிவிப்புக் குறிகளே உணர்ச்சிகள். சில நேரங்களில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறோம். சில நேரங்களில் கட்டுப்படுத்திக் கொள்ள முயல்கிறோம். இரண்டுமே தவறில்லை. ஆனால் உணர்ச்சிகளை அடக்கி வைப்பதுதான் தவறு.

அடக்கி வைக்கிற உணர்ச்சிகள் எரிமலையாய் வெடிக்கும். உடல் சார்ந்த விதத்திலும், மனம் சார்ந்த விதத்திலும் அது தீங்கினயே விளைவிக்கும். நம் உடல் சார்ந்த நோய்களில் எழுபது சதவீதமானவை அடக்கி வைக்கப்பட்ட உணர்ச்சிகளாலேயே வருபவை. அவை கொஞ்சம் கொஞ்சமாய் நம் உடலையும், மனத்தையும் அரித்துத் தின்றுவிடும்.

 

“மனக் காயத்திலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளவே நாம் உணர்ச்சிகளை அடக்கி வைக்கிறோம்” என்கிறார் தீபக் சோப்ரா. ஆனால் உணர்ச்சிகளை அடக்க முயல்வது தான் உண்மையில் நம்மை வேதனைக்குள்ளாக்கி விடும் என்பதை நாம் உணருவதில்லை. நாம் உணர்ச்சிகளை எவ்வளவு தான்அடக்கி வைக்க முயன்றாலும் அது வெளிப்படும் போது நோயாகவும் வெளிப்படக் கூடும். அந்த நோய்க்கு உண்மையான காரணம் எதுவென்று நாம் உணரமாட்டோம், ஒரு கோப உணர்வோ, ஏமாற்றமோ கூட அத்தகைய விளைவை அது ஏற்படுத்தலாம்.

அழுத்தத்தை வெளியேற்ற இடமில்லாத நிலையில் குக்கர் வெயிட் வெடித்துச் சீறுமே! அப்படித் தான் அடக்கி வைத்த உணர்ச்சிகளும் சீறும். அது நமக்கே ஆபத்தாகி விடும்.

 

அடக்கி வைத்த உணர்ச்சிகளால் மன அழுத்தம் (Stress) தான் அதிகரிக்கும். அடக்கி வைப்பது இயற்கைக்கு மாறானது என்பதை உணர்ந்து, உணர்ச்சிகளை பாதுகாப்பான முறையில் வெளியேற்றும் வழிகளைக் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.

இறுக்கமற்ற, அமைதியான மனத்தில் தான் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

வாழ்க வளமுடன்!!

– தமிழ் ப்ரியா




Leave a Reply