Shadow

உண்ணாவிரதம் – உன் நா விரதம்

அரசியல் வாணியமாக்கிய விடாணி
உருவலும் உறுவலால் உருகியது
வரி வாரியம் வறமிளைக்கவோ
மோறையும் வாறு இழந்தது

வேண்டியன பலவும் பட்டியலில்
உணவுமில்லா பெரும் பந்தலில்
தொண்டர்கள் யாவரும் பட்டினியில்
நீயோ பொருளீட்டும் இச்சையினால்

உண்ணாதிருக்கும் சில தினம்
மருத்துவமோ தானோ அனுதினம்
விவசாயி வாழ்வுமோர் புதினம்
பொதுமக்கள் மடிவதோ தினம்தினம்

உன் நாவது உண்ணா நாளதுவோ
புகழாரத் தேடலின் ஓர் நாளதுவோ
உன் நாவது உண்ணா நாளேதுவோ
மக்கள் உண்ண போராடும் நாளதுவோ

– சிந்தியா ரகுநாதன்

Leave a Reply