Shadow

உதவி இயக்குநரான நாயகி மிஷா கோஷல்

Unnodu Ka

நான் மகான் அல்ல, 7ஆம் அறிவு, முகமூடி மற்றும் ராஜா ராணி போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்தவர் மிஷா கோஷல். தற்போது, ‘உன்னோடு கா’ எனும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். நெடுஞ்சாலை புகழ் ஆரி, பால சரவணன், மாயா உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்தில் பிரபு மற்றும் ஊர்வசி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

R.K. இயக்கி, C.சத்யா இசையமைக்கும் இந்தப் படத்தை தமிழ் சினிமா உலகின் மூத்த தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் மற்றும் அபிராமி மெகா மால் இணைந்து தயாரித்துள்ளனர்.

“அபிராமி ராமநாதனின் தயாரிப்பில் நடிப்பது என்பது நான் செய்த பாக்கியம். இயக்குநர் ஆர்.கே. புதியவராக இருந்தாலும் ஒரு அனுபவம் வாய்ந்த இயக்குநர் போலவே பணியாற்றுகிறார். குறுகியக் காலத்தில் திட்டமிட்டப்படியே படப்பிடிப்பை முடித்து இருப்பதே இதற்கு சான்று. இசையமைப்பாளர் சத்யா அருமையாக இசை அமைத்திருக்கிறார். வரும் 21ஆம் தேதி நடைபெற இருக்கும் படத்தின் இசை வெளியீட்டு விழா, என் வாழ்வில் மிக முக்கியமான நாளாக அமையும். படத்தில் நான் நடிக்க மட்டும் செய்யாமல் உதவி இயக்குநராகவும் பணியாற்றியது மனத்திருப்தியைத் தருகிறது.

என்னோடு இணைந்து நடித்த ஆரி, மாயா மற்றும் பால சரவணன் ஆகியோர் எனக்குச் சிறந்த நண்பர்களாகத் திகழ்ந்ததோடு மட்டுமில்லாமல் என்னை மேன்மேலும் வளர்த்துக் கொள்ள உதவினர். பால சரவணின் காமெடி சென்ஸிற்கு இணை எதுவும் இருக்க முடியாது. அவருடைய டைமிங் காமெடியால் நான் சில காட்சிகளில் வாய் விட்டு சிரித்தேன்” என்கிறார் மிஷா கோஷல். ‘உன்னோடு கா’ திரைப்படம் நிச்சயமாக மிஷாவின் பாதையில் ஒரு திருப்பு முனையாக அமையும் எனஎதிர்ப்பார்க்கபடுகிறது.