Shadow

உன்னைப்போல் ஒருவனைப்பற்றி சில

நான் உன்னைப்போல் ஒருவன் படத்தை விமர்சனம் செய்யப் போவதில்லை. இணையத்தில் rediff,sifi லிருந்து குப்பன் சுப்பன் வரை விமர்சனம் வந்துவிட்டன. நான் பார்த்த உன்னைப்போல் ஒருவன் படத்தை சிலர் துர்பிரச்சாரம் செய்வதற்கு பதில் தர விரும்புகிறேன்.

குற்றச்சாட்டு 1
படத்தில் ஆங்கில வசனங்களை COMMOM MAN கமல் அதிகமாக பிரயோகிக்கிறார் என்பது ஒரு சிலரின்  குற்றச்சாட்டு.

COMMON MAN என்றால் என்ன என்பது தெரியாதவர்கள் செய்யும் – பிரச்சாரம் இது. சராசரி மனிதன் என்பது சரியான பொருள். அதாவது படிக்காதவன் தான் COMMOM MAN என்று தவறாக புரிந்து கொள்கிறார்கள். படித்தவன் – PRIVATE MAN ஆ இதற்கு விளக்கம் என்ன?

அதுவும் INTERNET – ல் BOMB  செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளும் அளவிற்கு அறிவுள்ளவன் எப்படி ஆங்கிலம் தெரியாதவனாக இருக்கமுடியும். கமல் பயன்படுத்தும் சில வார்த்தைகள் negotiate, state-of-the-art , explosive , என்று ஒரு சிலதான். இவை தினசரி ஆங்கில நாளிதழ் படிக்கும் ஒருவர் தினந்தோறும் பார்க்கும் வார்த்தைகள்தான் அலுவலக பணி, அலுவலகத்தில் மாதசம்பளம் வாங்குபவர்களின் – உடை – நடை – இதைத்தானே கமலின் கதாபாத்திரம் பிரதிபலிக்கிறது. இதில் எங்கு வந்தது குற்றம். பார்வை சரியில்லையெனில் பொருள் குற்றமாகத்தான் தெரியும்.   

குற்றச்சாட்டு 2
மோகன்லால் , லக்ஷ்மி கதாபாத்திரங்கள் ஆங்கிலம் பயன்படுத்துகிறார்கள்.
 
IPS , IAS அதிகாரிகள் பேச்சு வழக்கு எப்படி இருக்கும் என்பது எதார்த்தமாக தரப்பட்டுள்ளது. (உ.ம்.) ultimate authority, dictated by democracy , crank call , don’t create panic , responsibility , strategic இவை public administration  – ல் வரக்கூடிய சர்வசாதாரணமான சகஜமாக பயன்படுத்தக்கூடிய வார்த்தைகள். இவற்றை பயன்படுத்தியது எதார்த்தம்.  lashkar – e – toiba போன்றவை terrorist organisation ஐ குறிப்பவை.
 
இன்னொன்றை தெரிந்துக் கொள்ளவேண்டும். இந்தப் படத்தின் TARGET AUDIENCE திரையரங்கத்தின் பக்கமே வராதவர்கள் அல்ல வழக்கமாக சினிமா பார்ப்பவர்கள். அதிலும், கிராமத்து பாமரன் அல்ல அவனுக்கு TERRORISM பற்றிய பயமோ, அதற்கான அனுபவமோ இல்லை. நகர – நடுத்தர – ரசிகர்கள்தான். அதில் ‘உன்னைப்போல் ஒருவன்’ இலக்கை வெற்றிக்கரமாக அடைந்து விட்டான்.
இவர்கள் 30 வருடமாக தியேட்டர் பக்கமே போகாத எதிர்வீட்டு அங்கிளும் சினிமா பார்த்து 20 ஆகிறது என்கிற ஆண்டியும் புரிந்து கொள்ளவில்லையே என்று ஏங்குகிறார்கள். அவர்கள் எந்தப் படம் எடுத்தாலும் தியேட்டர் பக்கம் வரப் போவதில்லை. அவர்கள் இந்தப் படத்தின் TARGET அல்ல. அதனால் இந்தப் புலம்பல் தேவையில்லாதது.  
 
குற்றச்சாட்டு 3 
ஒரு நடிகரை விமர்சிப்பது போல காட்சி உள்ளது ?

 இதில் மக்களை பாதுகாக்கத்தான் போலீசே தவிர தனி நபர்களை அல்ல. மேலும் சிறு பிரச்சனையையே அனுகத் தெரியாத சில நடிகர்கள்  நாளை அரசியல் – அதிகாரம் என ஆசைப்படுவதும் அப்படி அவர்கள் ஆட்சிக் கட்டிலில் அமரும் போது எவ்வாறு இம்மாதிரியான நிர்வாகப் பிரச்சினைகளில் முடிவு எடுப்பார்கள். நிர்வாகம் செய்வது – என்கிற கேள்விகளை மக்கள் சிந்திக்கவே அக்காட்சி வைக்கப்பட்டுள்ளது. தேவையின்றி  அல்ல.

குற்றச்சாட்டு 4 
படத்தில் பாடல்கள், காமெடி டிராக், பஞ்ச் டயலாக், டேன்ஸ், சண்டை இல்லை ..

TITANIC உலகமகா வெற்றி. பாடல்கள், பஞ்ச் டயலாக் இருந்ததா? தமிழ் சினிமாவின் முகம் மாறிவருகிறது. சுப்ரமணியபுரம், பசங்க , நாடோடிகள் ஆகிய படங்களின் வெற்றி அதையே காட்டுகிறது. கதை தான் முக்கியம் மற்றவை அப்புறம் என்பதே இன்றைய TREND ஆகா உள்ளது. இந்த விறுவிறுப்பான கதைக்கு பாடல் தேவையில்லை. ஒருவேளை   கமல் TV காம்ப்பியர் நடாஷாவுடன் போனில் பேசி , பேசி அவர்களுக்குள் காதல் ஏற்பட்டு  கமல் போன் செய்தவுடன் நடாஷாவின் முகம் மலர்ந்து கனவில் அரைகுறை ஆடையுடன் கமலுடன் டேன்ஸ் ஆடி ஒரு குத்துப்பாட்டு போட்டிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார்களோ இந்த அறிவுஜீவிகள் (என்னக் கொடுமை)!?

நான் உன்னைப்போல் ஒருவன் படம் பார்த்து எனக்கு தெரிந்தவற்றை கூறினேன். படம் வெற்றிபெற்றுள்ளது யாரிடம் கொண்டு சேர்க்க வேண்டுமோ அவர்களிடம் சேர்ந்தாயிற்று. பாராட்ட மனமிருந்தால் பாராட்டுங்கள் இல்லையென்றால் வாயை மூடி மெளனமாய் இருங்கள். 
                                                                
– சாமானியன்