Shadow

உப்பு கருவாடு தயார்

ராதா மோகன் உப்பு கருவாடு

இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் தயாராகி வரும் ‘உப்பு கருவாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ஃபர்ஸ்ட் காப்பி ஃபிக்சர்ஸ் மற்றும் நைட் ஷோ சினிமா தயாரிப்பில் கருணாகரன், நந்திதா ஆகியோர் நடித்துள்ளார்கள்.

“தேர்ந்த பல படங்களைத் தந்து வரும் இயக்குநர் ராதா மோகன், மீண்டும் ஓர் அழகிய படத்தை எடுத்துள்ளார். நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரது திறமையான உழைப்பும் படத்தைக் குறித்த காலத்தில் முடிக்க உதவியுள்ளது. ‘உப்பு கருவாடு’ குழுவினருக்கு எனது நன்றிகள். படத்தின் இறுதிகட்ட வேலைகள் மிக வேகமாய் நடந்து வருகிறது. விரைவில் ரசிகர்கள் சுவைக்கலாம்” என மகிழ்ச்சியுடன் கூறினார் படத்தின் தயாரிப்பாளர் ராம்ஜி நரசிம்மன்.