Shadow

ஊளைச்சதைக் கோளாறு

சிலர் உடல் பருத்து சதைகள் தொங்கி நடக்கக் கூட சிரமப்படுவதைப் பார்க்கிறோம். இதே போல் உடல் எடை அளவிற்கு அதிகமாக அதிகரிப்பதை தான் ஊளைச்சதை (Obesity) என்கிறோம்.

மேலை நாடுகளில் இது ஒரு சமூக நோயாகக் காணப்படுகிறது. இந்நோயால் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்படுவதால் இது ஓர் சமூக நோயாகக் கருதப்படுகிறது. ஆனால், கீழை நாடுகளில் இது போன்ற பாதிப்புகள் பெரும்பாலானவர்களிடம் காணப்படாததால் இதை ஒரு சமூக நோயாகப் பார்ப்பதில்லை. எனினும் இந்நோய் அதிகரிக்காமல் காக்க வேண்டும். எனவே மக்கள் இதைப் பற்றி அறிந்திருக்க வேண்டியது மிக அவசியமாகும்.

உடலில் அளவுக்கு அதிகமாக கொழுப்பு படிவதாலேயே ஊளைச்சதை ஏற்படுகிறது.

பொதுவாகவே பல்வேறு காரணங்களை இதற்கு குறிப்பிடலாம். உடல் பயன்படுத்திக் கொள்ள முடியாத அளவுக்கு உணவு வகைகளை உண்ணுதல் ஒரு முக்கிய காரணமாகும். இவ்வாறு அதிகமாக உண்ணப்படும் உணவால் கலோரிகள் கொழுப்புத் திசுவாக மாற்றப்பட்டு உடலில் சேமிக்கப்படுகின்றன. ஊளைச்சதையானது பெரும்பாலும் குழந்தைப் பருவத்திலேயே தீர்மானிக்கப்படுகிறது. குழந்தைப் பருவத்தில் ஊளைச்சதையுடன் இருக்கும் குழந்தைகள் வளர்ந்த பின்னரும் ஊளைச்சதையுடனயே இருக்கும். குழந்தைப் பருவத்தில் அளவிற்கு அதிகமாக உணவூட்டப்படும் ஒருவருடைய உடலில் வளர்ந்த பின்னரும் அதிகப்படியான கொழுப்பு செல்கள் உருவாகும்.

தற்போது ஆண்களை விட பெண்கள் தான் ஊளைச்சதையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இயல்பாகவே ஆண்களை விட பெண்களின் உடலில்தான் அதிக கொழுப்புத் திசுக்கள் இருக்கும். ஊளைச்சதை ஏற்படுவதற்கு காரணம் அவர்களுடைய உணவுப் பழக்கமும் வேறு சுற்றுப்புற காரணிகளும் தானே தவிர மரபுப் பண்பு அல்லது ஹார்மோன் கோளாறு அல்ல என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

ஊளைச்சதையால் பாதிக்கப்பட்ட ஒருவருடைய இதயத்தின் வேலைப்பாடு அதிகரிக்கப்பதே ஊளைச்சதையினால் ஏற்படும் கோளாறுகளுக்கான முக்கிய காரணம். உடலில் அதிகப்படியாக சேரும் ஒவ்வொரு கிலோ (1kg) கொழுப்பு திசுவுக்கும் மூன்று மீட்டர் நீள இரத்தக் குழாய்கள் வளர்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஊளைச்சதை பொதுவாக ஒருவருடைய உடல் அழகை மட்டும் பாதிப்பதில்லை.

பல்வேறு நோய்கள் உருவாகவும் காரணமாக இருக்கின்றது. இருதய நீரிழிவு, பித்தப்பை நோய், கருப்பை புற்றநோய் மற்றும் மன அழுத்தம் என்பவற்றால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் தாங்கள் சமூகத்தினால் அல்லது கேலிக்கு உள்ளாகிறோம் என நினைத்து மனமுடைந்து தற்கொலை முயற்சிக்கும் போய் விடுகிறார்கள் என மருத்துவ ஆராய்ச்சியாளர்க்ள கூறுகின்றார்கள். பிறந்த குழந்தைகளுக்கு தாய் பால் அளித்து வந்தாலே ஊளைச்சதை ஏற்படும் வாய்ப்புகள் பின்னாளில் அக்குழந்தைக்கு கம்மி ஆகிறது எனவும் ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.

எனவே குழந்தைப் பருவத்தில் இருந்தே உடற்பயிற்சி, சரியான உணவுப் பழக்கம்போன்றவற்றில் கவனமாக இருந்து ஊளைச்சதை எனும் சமூக நோயை விரட்டி நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ்வோம்.

-தமிழ் ப்ரியா.

Leave a Reply