இந்த வருடத்தின் மிகப் பெரிய கோடைக்காலத் திரைப்படம் ‘கடந்த காலத்தின் எதிர் காலம்’.
வரலாற்றில் மிகப் பெரிய சாதனை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் X Men- Days of Future past தமிழில் ‘கடந்த காலத்தின் எதிர்காலம்’ என்ற பெயரில் மே மாதம் 23ஆம் தேதி வெளியிடப்படுகிறது . ஆங்கிலம் , ஹிந்தி , தமிழ் மற்றும் தெலுங்கில் திரையிடப்படும் இப்படம் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படமாகும் .
சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் வெள்ளோட்டம் உலகமெங்கும் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. உலகத்தரம் வாய்ந்த நடிகர்களான ஹக் ஜேக்மேன் , ஜேம்ஸ் மகவே ஆகியோர் நடிப்பில் பரயன் சிங்கர் இயக்கும் இந்த பிரம்மாண்டமான படைப்பு ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் உலகெங்கும் வெளியிட உள்ளது .