Shadow

“என்னைப் பழிவாங்குகிறார் விஷால்” – இயக்குநர் பாலா

Naan Sigappu Manithan நான் சிகப்பு மனிதன்

‘துயில் மயக்க நோய் (Narcolepsy)’ என்னும் நரம்பியல் ஒழுங்கின்மையால் பாதிக்கப்பட்ட பாத்திரத்தில் நடிக்கிறார் விஷால். ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் அதீத துக்கமோ, மகிழ்ச்சியோ, பயமோ ஏற்பட்டால் தூங்கி விழுந்து விடுவார் விஷால்.

“எனக்கு இந்த நோயோடு சீரியஸ்னஸ் தெரியும். ஏன்னா என்னுடைய அசிஸ்டென்ட்க்கு இந்தப் பிரச்சனை இருந்தது. போய் பேப்பர் எடுத்துட்டு வரச் சொல்லி அனுப்பினா.. அங்க போய் தூங்கிடுவான். டிஸ்கஷன்ல இருக்கும் பொழுது தூங்கிடுவான். இதனால அவன் ஒரு ஆக்ஸ்டென்ட்ல மாட்டி, 2 மாசம் கோமாவில் இருந்தான்” என்றார் இயக்குநர் விஜய்.

“இந்தப் படத்தில் வொர்க் பண்ற எடிட்டர் ரூபனும், ஜீ.வி.பிரகாஷூம் என் ஃப்ரெண்ட்ஸ். அவங்க மூலமா படத்தோட கதையைக் கேள்விப்பட்டேன். வழக்கமா புதுசா ஒரு கதைன்னு சொல்வாங்க. ஆனா உண்மையிலேயே இயக்குநர் திரு புதுசா ஒரு கதை பிடிச்சிருக்கார். ஹீரோ எக்ஸைட் ஆனா தூங்கிடுவாரு. நான் ட்ரைலர் பார்த்ததிலிருந்து, படம் எப்ப வரும்னு தூங்காம வெயிட் பண்ணிட்டிருப்பேன்” என்றார் இயக்குநர் அட்லி.

Saranya Ponvannan“ரொம்ப அழகா உயரமா எல்லாத் திறமையும் இருக்கிற மகனுக்கு ஒரு குறைபாடு. அந்தக் குறையோடு அவனை எப்படி வளர்ப்பது.. அவன் படிக்க முடியுமா வேலைக்குப் போக முடியுமா கல்யாணம் ஆகுமான்னு.. ஒரு தாயாக ஒவ்வொரு சீன்லயும் நினைச்சுப் பார்த்து நடிக்கவே ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஆனா இந்த மாதிரி குறையோடிருக்கும் பிள்ளைகளின் அம்மா இந்தப் படத்தைப் பார்த்தால் ரொம்வ சந்தோஷப்படுவாங்க. ஏன்னா இந்தக் குறைகள் இருந்தாலும் அவர்களால் அச்சீவ் பண்ண முடியும்னு சொல்ற படமிது” என்றார் சரண்யா பொன்வண்ணன்.

“சில கதையெல்லாம் கேட்டா தூக்கமே வராது. ஆனா இதில் நிறைய தூக்கம் வருது.. ஹீரோவுக்கு. கஜினி மாதிரியான ஒரு மிகப் பெரிய ஹிட்டாக இந்தப் படம் இருக்கும்னு நினைக்கிறேன். ஏன்னா ஒரு பெரிய ஆக்ஷன் ஹீரோக்கு, வில்லன் அடிக்க வரும்பொழுது தூக்கம் வருவது என்பது அமேசிங்கான தாட்” என்றார் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன்.

“ஏதாவது டிஃபரன்ட்டாகப் பண்ணணும்னு நினைச்சுப் பண்ற விஷயத்தை விட, சர்ப்ரைஸாக நம்மள தேடி ஒரு விஷயம் வரும்பொழுது, அது ரொம்ப சிறப்பாக இருக்கும். இது எனக்காக எழுதப்பட்ட கதையில்லை. இயக்குநர் திரு என்னிடம் கதை சொல்லும் பொழுது, முதலில் நார்கோலெப்ஸி பத்தி சொல்லுங்கன்னு சொன்னேன். யூ-ட்யூப்பில் காட்டினார். சென்னையிலேயே நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கான்னு தெரிஞ்சது” என்றார் விஷால்.

Director Bala“விஷாலுக்கும் திருக்கும் என் மேல என்ன கோபம்னு தெரில. ஏன்னா அந்த தூங்கி வழியுற கேரக்டர் நான் தான் அது. ஏன்னா காலையில் பதினொரு மணிக்குதான் ஷூட்டிங் போவேன். அப்புறம் சாயந்திரம் செவன் தர்ட்டிக்கு ஷூட்டிங்னா.. விடியப் போகிற நேரத்தில்தான் போவேன். சோ அதுல அனுபவப்பட்டதாலோ என்னவோ.. ரொம்ப காயப்பட்டிருப்பார்னு நினைக்கிறேன். என்னைப் பழி வாங்குறதுக்காகவே இப்படியொரு படமெடுக்கிறார் விஷால்” என்றார் இயக்குநர் பாலா.