Shadow

என்னை ஏன் டீ வாங்கிட்டு வரச் சொல்லலை?

பொதுவாகவே எனக்கு யாரிடமாவது  பேசுவதென்பதே ரொம்ப கஷ்டமான விஷயம். 

‘ஆமா என்னத்த பேசி!’ என பேச வேண்டிய இடத்தில் பேசாமல் இருந்து, இழந்தவைகளின் பட்டியல் ரொம்பப் பெரிது. சமீபத்தில் ஒரு திரைப்படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பையே  கூட இழந்திருக்கிறேன். இப்படிப் பட்ட என்னை “சைபர் க்ரைமில்” போய் என் மீதான அவதூறுக்கு எதிராக கம்ப்ளெயின்ட் பண்ணச் சொல்லி ஆளாளுக்கு அட்வைஸ் என்ற பெயரில் விரட்டினார்கள். போனா நிறைய கேள்வி கேட்பாங்களே.. போகணுமா என ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் காட்டுத்தீ போல் பரவும் புரளியை நிறுத்த, சைபர் க்ரைம்க்கு போவதைத் தவிர வேறு வழியிருப்பதாகவும் தெரியவில்லை..

போதாக்குறைக்கு, “மானநஷ்ட வழக்கு போட்டு.. 10 லட்சமாவது  வாங்குடே. ஐடியா சொன்ன என்னை மறந்துடாதே! எனக்கு 30% கொடுத்துடணும்”னு ஆசையை வளர்த்து விட்டார் கே.வி.ஆர் அண்ணன். அட.. பத்து லட்சம் வேணாம் ஒரு பத்தாயிரம் கிடைத்தால்கூட, ‘ஐ.. சூப்பராச்சே!’ என ஆசை பிறந்தது. என்னை முதலில் தொடர்பு கொள்ள முயற்சித்து, விஷயத்தைத் தெரியப்படுத்தியதும் இவர்தான்.

‘யார் செய்திருப்பார்கள்?’ என்ற குழப்பமும் ஆச்சரியமும் அதிகமாக இருந்ததால்.. எனக்கு ஃபேஸ்புக்கில் வந்த மெஸ்சேஜ் ஒன்றை கவனிக்கத் தவறிட்டேன்.

தமிழ் தமிழானவள்

சைபர் க்ரைம் போவது பிரச்சனை இல்லை. அங்குப் போனால்  யாரைப் பார்க்கணும், என்ன பேசணும்.. அதுவும் நான் சொல்ல விரும்பறதைத் தெளிவாகப் பேசணும். அவங்களுக்குப் புரியுறாப்ல பேசணுமேன்னு யோசிச்சப்ப உறவினரும், அவருடைய வழக்கறிஞர் நண்பரும் வாலன்ட்டியரா வந்து வண்டியில ஏறி ட்ரெய்னிங் கொடுத்தாங்க.

இதுல என்ன கொடுமைன்னா ட்ரெய்னிங் கொடுத்த உறவினருக்கு மார்க்கையும் தெரியாது.. ஃபேஸ்புக்கையும் தெரியாது.

அவதூறு “உனக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கா?”

“ம்ம். தமிழ் தமிழானவள்-னு ஒருத்தவங்க மேல.”

“யார் அவங்க?”

“என் ஃபேஸ்புக் ஃப்ரெண்ட்.”

அவர் என்னை ஒரு மாதிரி பார்த்தார்.

“ஆணா பொண்ணா?”

“பொண்ணுன்னுதான் நினைக்கிறேன்” என இழுத்தேன். 

“பொண்ணுங்க கூட ஃப்ரெண்ட்ஷிப்பா?” என ஜெர்க்கான உறவினர்.. சமாளித்துக் கொண்டு விசாரணையைத் தொடர்ந்தார்.

“அந்தப் பொண்ணோட  பேசியிருக்கியா? அவங்க கேரக்டர் எப்படி?” 

ட்ரெயினிங்கே கண்ணைக் கட்டுதே என்ற பீதியுடன், “அதெல்லாம் தெரியாது. ஆனா 2 வருஷமா ஃப்ரெண்ட்” என்றேன்.

“ஃபேஸ்புக்ல உனக்கு எவ்ளோ ப்ரெண்ட்ஸ்?” எனக் கேட்டார்.

“648”.

“அவ்ளோ பொண்ணுங்க கூட நீ ஃப்ரெண்ட்ஸா?” என அதிர்ந்தார் உறவினர்.

“இல்ல.. இல்ல.. மொத்தமே அவ்ளோ ஃப்ரெண்ட்ஸ்தான். அதில் 20 பேர்தான் பெண்கள் இருப்பார்கள். அதில் அஞ்சாறு பேரை மட்டுந்தான் தெரியாது” என்றேன். அவருக்கு ஒன்றும் புரிந்ததுபோல் தெரியவில்லை.

“முதல்ல.. தெரியாதவங்க கூட பழகக் கூடாது. முக்கியமா பொண்ணுங்க கூட.. அது பல வீண் பிரச்சனைகளை உருவாக்கும்.”

“அத்தனைப் பேரையும் அன்-ஃப்ரெண்ட் பண்ணிடு. இனி யார் கூடவாவது ஃப்ரெண்ட் ஆகணும்னா.. ஃபோன் நம்பர் வாங்கிப் பேசிட்டு,  அதுக்கு அப்புறம் ஃப்ரெண்ட் ஆயிக்கோ” என சலுகை கொடுத்தார்.

ம்க்கும். என் மீதான அவதூறே அதுதான்!

யாரோட பேரும், ஊரும்,  நம்பரும் தெரியாதப்பவே.. மத்தவங்க பெர்சனல் டீட்டெயில் தெரிஞ்சுக்கிட்டு அவங்களை பிளாக்-மெயில் பண்றேன் என புரளிய கிளப்பி விட்டிருக்காங்க. அதையும் சிலர் நம்பிட்டு, என்னைப் போன்ற ஆட்களை கல்லால் அடிச்சே கொல்லணும்னு அறச்சீற்றத்தோடு என்னைத் தேடிட்டிருக்காங்க. சுமார் 345 பேர் இதை ஷேர் பண்ணி என் புகழை உலகறிய வச்சிருக்காங்க.. இந்த லட்சணத்துல ஒவ்வொருத்தர்கிட்டயும்  ஃபோன் நம்பர் வாங்கச் சொல்லி ஐடியா தர்றாரே! விளங்கினாப்லதான்னு விதியை நொந்து கொண்டேன். விசாரணை தொடர்ந்தது.

“உனக்கும் தமிழ் தமிழானவளுக்கும் என்ன எனிமிட்டி?”

“ஒண்ணும் இல்லை.”

“இல்லாமலயா.. இப்படிலாம் பண்றாங்க?”

“இல்ல.. அவங்களுக்கும் சிம்ம வாகனிக்கு ஏதாச்சும் சண்டை நடந்துச்சோ என்னமோ? அவங்க ‘சிம்ம வாகனி’ என்பது என்னோட ஃபேக் ஐடின்னு நினைக்கிறாங்க.”

“சிம்ம வாகனியா!? அது யாரு?”

“என் ஃபேஸ்புக் ஃப்ரெண்ட்.”

“பொண்ணா..” என நான் சொல்லாமலே உண்மையைக் கண்டுபிடிச்ச மகிழ்ச்சியை மறைத்துக் கொண்டு, ‘பார்த்துக்கோங்க’ என ட்ரெயினிங்கை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த வழக்கறிஞர் நண்பருக்கு சைகை செய்தார்.

நான் ஏன் வாய் திறக்கிறேன்?

“அதுக்குதான் சொல்றது.. உன்னை சந்தேகப்படல. பொதுவா சொல்றேன். ஆணா இருந்தாலும் முன்ன பின்ன தெரியாதவங்க கூட பழகக் கூடாது. என்னப் புரியுதா??”

நல்லாவே புரிஞ்சது. முள்ளு மேல சேலை பட்டாலும்.. சேலை மேல முள்ளு பட்டாலும்.. பாதிப்பு என்னமோ சேலைக்குதான். அப்பொழுது, ‘ரிகர்சல் சொதப்பினா நாடகம் பிரமாதமா வரும்டா’ என பாட்டையாவின் குரல் கேட்டது. கொஞ்சம் தெம்பாக இருந்தது அந்தக் குரல். ஃபேஸ்புக்கில் தப்பான ஒரு போஸ்ட்டை ஷேர் பண்ணினால் கூட குற்றம்தானென வழக்கறிஞர் சொன்னார். வாவ்.. அப்போ 300 x 1000 என்றால் கூட 3 லட்சம் என கணக்கு பண்ணிக் கொண்டிருந்தேன். ஒரு வழியாய் ட்ரெய்னிங் முடிந்த போது தெளிவாகி இருந்தேன். கம்ப்ளெயின்ட் கொடுப்பதற்கு முன்னர் உன் மேல் கம்ப்ளெயின்ட் இருக்கான்னு முதலில் பார்க்கணும், நானும் கூட வர்றேன் எனச் சொன்ன உறவினரைத் தவிர்த்து விட்டு  தனியே சைபர் க்ரைம் அலுவலகம் போனேன்.

எக்மோர் பேருந்து நிலையத்தில் இறங்கி, சாலையைக் கடந்து கமிஷனர்  அலுவலகத்தை நெருங்கும் போதுதான் கொஞ்சம் திகிலாக இருந்தது. இந்தக் கட்டடத்தில் எங்கே போய் யாரைப் பார்ப்பது? 

பக்கத்தில் ஏதும் டீக்கடை இருக்கிறதா எனத் தேடினேன். கம்ப்ளெயின்ட் கொடுக்கும் முன் டீ வாங்கித் தரணும்னு எத்தனை சினிமாவில் பார்த்திருக்கேன். ஒரு டீக்கடையும் என் கண்ணில் படலை. பதற்றத்தில் தெரியலையா அல்லது நிஜமாகவே இல்லையான்னு தெரில. எப்படியும் இன்னிக்கு அலைய விடப் போறாங்கன்னு நினைச்சுக்கிட்டே கமிஷனர் அலுவலகத்தில் நுழைந்தேன். லட்டியை ஓங்கியபடி ஒருவர் வேகமாக வந்தார். நான் நின்னுட்டேன். பக்கத்தில் வந்து, “அடுத்த கேட் ப்பா” என லட்டியால் சுட்டிக் காட்டினார். சினிமா தியேட்டரில் செக் பண்றது போலவே செக் பண்ணினாங்க. அப்படியே லேப்டாப் ஆன் செய்து ஆஃப் பண்ணச் சொன்னாங்க. 

“யாரைப் பார்க்கணும்?”

“சைபர் க்ரைம்.”

‘சைபர் க்ரைம்’, இரண்டாவது மாடி என போர்ட் இருந்தது. வளைச்சு வளைச்சு மூன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் படிகட்டு இருந்தது. ஆனால் அனைவரும் லிஃப்ட்தான் உபயோகிக்கிறாங்க. இரண்டாவதுமாடி வந்து, யாரைப் பார்ப்பது என்ன செய்வதுன்னு தெரியாம ஒரு முழு ரவுன்ட் வந்தேன். பெரிய ஹாலில் moulded தட்டி வைத்து அறை அறையாகப் பிரித்திருந்தார்களே தவிர.. அறை என்ற தனியாக எதுவும் கட்டப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. என்னை சந்தேகமாகப் பார்த்தவாறே ஒருவர் என்கிட்ட வந்தார். அங்க அனைவரும் காக்கி அணியாத மஃப்டி போலீஸ்தான் போல!

“ரெஸ்ட் ரூம்?”

“ஓ.. பாத்ரூமா? நேரா போய் ரைட்.”

அசிஸ்டென்ட் கமிஷ்ணர் ஆஃப் போலீஸ் , க்ரைம் பிரான்ச் என ஒரு டோரில் எழுதியிருந்தது. வாசலில் பிங்க் கலர் சுடிதார் போட்ட பெண் காவலர் நின்னுட்டிருந்தாங்க. அவங்க உட்பட அங்கு அனைவருமே என்னைவிட உயரமாக இருந்தது கொஞ்சம் பயமுறுத்தியது. 

“என்னப் பண்ற?”

ithuTamil.com இணைய இதழில்  சினிமா ரிப்போர்ட்டர்.” 

நான்கு பேர் அமர்ந்திருந்தனர். என் கதையை கேட்டார்கள். சொன்னேன். 

லேப்டாப் ஆன் பண்ணி , ஸ்க்ரீன்-ஷாட் அனைத்தையும் காட்டினேன். 

“ம்ம். நெட்ல இருந்து பழைய அட்ரஸ்  காப்பி பண்ணி  போட்டு இருக்காங்க. இங்க ஃபோன் நம்பர் 044ல தான ஆரம்பிக்கும். மத்ததெல்லாம் சரி. இப்ப nic லாம் gmail ஆக மாறிடுச்சு. கமிஷனர் ஆஃபீஸ் அட்ரஸை மிஸ்யூஸ் பண்ணதுக்கே உள்ள தூக்கி வைக்கலாம்” என்றார் ஒரு அதிகாரி.

அனைவருமே டச்-ஸ்க்ரீன் உபயோகிப்பவர்கள் போல! என் மானிட்டரில் விரல் வைத்து பேஜை மேலிழுக்க முயன்றனர். லிங்கை க்ளிக் பண்ணினாங்க.

“சார்.. இது ஸ்க்ரீன் ஷாட்.”

“ஓ.. ஃபேஸ்புக் போ!”

“சார்.. நெட்ட் இல்ல!”

“யு.ஆர்.எல். சொல்லு” என அவங்க டெஸ்க் டாப்பில் பார்த்தாங்க. ஸ்க்ரீன்-ஷாட்லாம் கேட்டாங்க. 2 GB பென்-ட்ரைவில் கொடுத்தேன்.

www.fb.com/pengal.women

பேஜ் ஓப்பன் ஆகலை. 

“என்னப்பா..  அந்தப் பேஜே இல்லையே!” என புக்-மார்க் பண்ணிக் கொண்டு, மீண்டும் ஸ்க்ரீன்-ஷாட்டைப் பார்த்தாங்க. “url-லோடு சேர்த்து ஸ்க்ரீன்-ஷாட் எடுக்கலையா?” என்றவர்கள்,  அடுத்து தமிழ் தமிழானவள் ஃப்ரொஃபைலைப் பார்த்தாங்க (இடையில், ‘அவதூறு’ என தமிழில் ஃபோல்டர் பெயர் வச்சிருந்ததைப் பார்த்து ஆச்சரியமாகி எப்படின்னு கேட்டாங்க. லேப்டாப்பிலிருந்து Azhagi காப்பி பண்ணிக் கொடுத்தேன்).

“இவங்கதான் உன்னை கோர்ட்ல பார்க்கிறேன் என மெஸ்சேஜ் பண்ணதா?”

“ஆமாம் சார்.”

“இவங்களுக்கும் உனக்கும் என்ன பிரச்சனை?”

“எனக்குத் தெரிஞ்சு ஒண்ணுமில்லை சார்.”

“ஏதாவது அவங்களைப் பற்றி தப்பா கமென்ட் பண்ணியா?”

“இல்ல சார்.”

“பின்ன ஏன்ன்.. இப்படிப் பண்ணப் போறாங்க? என்னமோ சொல்லாம மறைக்கிற.”

“நிஜமாவே ஒண்ணுமில்லை சார்.”

“என்னப் பண்றீங்க?”

“சினி ரிப்போர்ட்டர்” என ஒருவர் சொன்னார்.

“ஸ்ரீ-ல?”

“சினிமா ரிப்போர்ட்டர்ப்பா.”

“அதான் ஏதாச்சும் நடிகையைப் பற்றி தப்பா எழுதியிருப்ப?”

“அது மாதிரிலாம் ஒண்ணுமில்ல சார். பி.ஆர்.ஓ. தர்ற நியூஸை அப்படியே போடுறது மாதிரியான வேலை.”

நடுவில் வேறு ஒரு கேஸ் வந்தது. மீண்டும் என்னிடம் திரும்பி, “ம்ம்.. எல்லாத்தையும் டெலிட் பண்ணிட்டாங்க. பண்ணது தமிழ் தமிழானவள்தான்னு தெரியுது. இப்ப என்னப் பண்ணலாம்?” என்றார் என்னிடம் ஒருவர். 

“ம்ம்.. ஃப்ரீயா பப்ளிசிட்டி தேடிக் கொடுத்திருக்காங்க. அப்புறம் என்னப்பா?” என ஒருவர் சிரித்தார்.

“சார்.. 350 பேர்கிட்ட இந்த ஸ்டேட்டஸை ஷேர் பண்ணியிருக்காங்க. ‘பையனை அரெஸ்ட் பண்ணிட்டாங்களாமே.. உண்மையா!’ என வீட்டுக்கு  ஃபோன் பண்ணிக் கேட்டுருக்காங்க சார். என் மேல கேஸ் ஏதாச்சும் இருக்குமான்னு பயப்படுறாங்க” என என் கவலையைச் சொன்னேன்.

“யார் மேல கேஸ் வந்தாலும் இங்கதான் வரணும். அப்படி எதுவும் வரலை. வந்திருந்தா.. நாங்களே உன்னைக் கூப்பிட்டிருப்போம்.”

“உன் ஃபோட்டோ எடுத்து தவறா யூஸ் பண்ணியிருக்காங்க. இது பெரிய க்ரைமாச்சே! அவங்கள எப்படித் தெரியும்?”

“2 வருஷமா ஃபேஸ்புக்ல ஃப்ரெண்ட். தமிழர் களம், Wisdom of Siththars என நிறைய பேஜுக்கும் குழுமத்துக்கும் அட்மின். பெண்கள் பேஜும் அவர்கள்துதான் போல! என்னை கோர்ட்டில் பார்க்கிறேன் என அனுப்பியதுதான் அவங்க முதல் மெஸ்சேஜ். இன்னொருத்தங்க ஐடியை என்னோட ஃபேக் ஐடின்னு ரொம்ப நம்புறாங்க போல! ஆனா அந்த பெண்கள் பேஜிலோ, தமிழ் தமிழானவளோ ஃப்ரொஃபைலிலோ.. நான் என்னப் பண்ணேன் என இதுவரை சொல்லலை.”

“இதுக்கு முன்னாடி இப்படி ஏதாவது அவங்க பேஜில் பண்ணியிருக்காங்களா?”

“இல்லை”ன்னு சொன்னேன். ஆனா அப்போ நினைவில் இல்லை. இப்பவும் சரியாக ஞாபகம் வரலை. (ஏதோ ‘ஃபேஸ்புக் சைபர் குழு’ என ஒரு க்ரூப் தொடங்கி.. சிம்ம வாகனியை மிரட்டப் பார்த்தாங்க. பின் ‘கேட்பார் பேச்சைக் கேட்டு அப்படிப் பண்ணிட்டேன்’ என மன்னிப்புக் கேட்டாங்க. அந்த கமென்ட்டை நான் லைக் பண்ணது ‘இப்ப’ ஞாபகம் வருது). 

“யாராச்சும் அவங்க ஃப்ரோஃபைலை ஹேக் பண்ணியிருப்பாங்களா?”

“தெரிலை சார்.”

தமிழ் தமிழானவள் லண்டனில் இருக்காங்கன்னு நினைக்கிறேன் என கேள்விப்பட்டதைச் சொன்னேன். தமிழ் தமிழானவளுக்கு தெரிஞ்சவங்க யாரும் இங்கே இருக்காங்களா எனக் கேட்டார். ‘அவங்களையே எனக்கு பெரிசாத் தெரியாது சார்’ என சொல்லிக் கொண்டிருந்த போதே அவர் திருச்சிப் பக்கமிருக்கும் ஒரு ஆசிரமம் பற்றி அடிக்கடி மெஸ்சேஜ் போடுவது ஞாபகத்திற்கு வந்தது. 

“ஓங்காரக்குடில்னு ஒரு ஆசிரமத்தோட தொடர்பில்  உள்ளவர்னு நினைக்கிறேன்” என்றேன். அதிகாரி சிரிச்சுக்கிட்டே, “என்னப்பா.. சாமியாருங்க கேஸ் ஆயிடும்போல!” என்றார்.

“இப்ப என்ன பண்ணலாம்னு நினைக்கிறே?” என இன்னொருவர் நேரடியாக விஷயத்திற்கு வந்தார். 

“எனக்கு அவங்க மேல தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை. ஆனால் தேவையில்லாமல் என் படத்தை போட்டு என்னை அசிங்கப் படுத்தியிருக்காங்க.  யாரை வேணும்னாலும் பொதுவில் அவமானப்படுத்திடலாம்னு நினைச்சுட்டாங்க போல! இனி அவங்க எனக்கோ அல்லது வேறு யாருக்கேனும் இப்படிப் பண்ணணும்னு நினைக்கவே கூடாது. அதுக்கு என்னப் பண்ணலாம்னு நீங்கதான் சொல்லணும்” என்றேன்.

“அப்போ எதுக்கும் ஒரு வாரம் மானிட்டர் பண்ணலாம். இந்த ‘பெண்கள்’ பேஜ் டெம்ப்ரரியாகதான் மூடியிருப்பாங்க. திறந்ததும் அட்மின் யார்னு கண்டுபிடிச்சிடலாம். இடையில் தமிழானவள் ஏதாச்சும் சொல்றாங்களான்னு பாருங்க. 10 நாள் போல வெயிட் பண்ணலாம். வீட்டில் பயப்பட வேணாம்னு சொல்லுங்க. இதுலாம் ஒண்ணுமில்ல” என அவரது ஃபோன் நம்பர் கொடுத்து, “ஆனா இதுக்கு நடுவில.. இப்படி ஏதாவது நடந்தா இம்மீடியட்டாக என்னைக் கூப்பிடுங்க. டிலே பண்ணவே கூடாது” என்றார் இன்ஸ்பெக்டர்.

போட்டோ போட்டு அவதூறு பண்ணினது. புகார் கொடுத்ததா பொய்யான தகவலைச் சொன்னது. அவதூறான கமெண்ட்ஸ் அலவ் பண்ணினது. தான் போட்ட தகவலை தானே அழிச்சதுன்னு நிறைய தப்பு பண்ணிருக்காங்க. அத்தனைக்கும் ஆதாரமிருக்கு. பதற்றத்தைக் குறைச்சு அனுப்புனாங்க. 15 G பேருந்தில் ஏறிய பின்தான் பென்-ட்ரைவ் பற்றிய ஞாபகம் வந்தது. அடுத்த தடவை போகும்பொழுது கண்டிப்பாக வாங்கிடணும்.

இதில் நல்ல விஷயம் என்னவென்றால்.. ஃபேஸ்புக்கில் இருக்கும் என் நண்பர்களோ உறவினர்களோ யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை என்மீது. எவ்ளோ நாள் பிளான் பண்ணி இதை எக்ஸிக்யூட் பண்ணாங்களோ தெரியலை.. என்னை அசிங்கப்படுத்த? எல்லாம் புஸ்ஸூன்னு போயிடுச்சு.  இந்த ஆப்ரேஷனுக்காக 36,000+ லைக்ஸ் பெற்றிருந்த ஒரு ஃபேஸ்புக் பேஜை இழந்திருக்காங்க. ஆனா நான் ஒண்ணும் இழக்கலையே! பாவம் அவர்கள். 

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

நன்றி நண்பர்களே! 

ஒரே ஒரு வருத்தம். இனிமே யார் என்னை ஃபேஸ்புக்கில் அவமானப்படுத்தினாலும்.. தமிழ் தமிழானவளுக்கும் சேர்த்துதான் பிரச்சனை. ஆனா நீங்க கவலைப்படாதீங்க தமிழ் தமிழானவள்.. எனக்கு யாரும் எதிரிகள் இல்லை. உங்களைப் போல் காரணமேயில்லாமல் யாராவது திடீரென்று பகைமை பாராட்டினால்தான் உண்டு.  தைரியமா இருங்க. அப்படிலாம் எதுவும் நடந்துவிடாது. நம்பிக்கைதான் வாழ்க்கை. நீங்க பண்ண அசிங்கத்துக்கு நீங்க ரொம்பலாம் வருந்த வேண்டாம். கொஞ்சமா ஃபீல் பண்ணாலே போதும். ஆனா இன்னும் என்னக் காரணத்துக்காகப் பண்ணீங்கன்னு நீங்க சொல்லவேயில்லை. சரி பரவாயில்லை. 

நீங்க இவ்வளவு பண்ணியும், உங்க மேல எனக்கு ஏனோ கோபமே வரலை.  

பிழைச்சுப் போங்க.

அன்பே சிவம் 😉

– தினேஷ் ராம்

பி.கு.: தமிழ் தமிழானவளை நினைத்தால் ஒரு விஷயத்தில் பிரமிப்பாக இருக்கு. நண்பர்களின் உதவியுடன் அவங்க சம்பந்தப்பட்ட ஃபேஸ்புக் குழுமங்கள், பேஜ்கள் பற்றி கணக்கெடுத்தால் தலை சுற்றுகிறது. தெரிய வந்த பட்டியல் மட்டுமிது. தெரியாமல் இன்னும் இருக்கலாம். 

<> தமிழ் தமிழானவள் – www.facebook.com/thamil.thamilanaval

<> தமிழ் தமிழானவள் ஃபேஸ்புக் பக்கம் – https://www.facebook.com/thamilanaval

<> ஓங்காரக்குடில் Ongarakudil – London Branch – https://www.facebook.com/Ongarakudil.London

<> பெண்கள் women – https://www.facebook.com/pengal.women

<> தமிழ் தமிழானவள் பதிவின் இணைப்பு –https://www.facebook.com/thamil.thamilanaval/posts/10200582342919885

<> தமிழ் தந்த சித்தர்கள் – https://www.facebook.com/Siddhars

<> தமிழும் சித்தர்களும் Thamil.Siththars – https://www.facebook.com/Thamil.Siththars

<> பசுமைப் புரட்சி Green Revolution – https://www.facebook.com/pasumai.puradchi

<> Sri Agathiar Sanmarka Sangam – ஓங்காரக்குடில் – https://www.facebook.com/SriAgathiarSanmarkaSangam

<> சித்தர் அறிவியல் Wisdoms of Siddhars – https://www.facebook.com/groups/siddhar.science/

<> தமிழ் -கருத்துக்களம் – https://www.facebook.com/tamil.kalam

ஷ்ஷ்ஷ்ப்பாஆஆ.. எத்தனை!? இவ்வளவு பேஜும் குழுமமும் ஏன்? யாரையாவது அசிங்கப்படுத்த உதவும் என்பதற்காக உரம் போட்டு வளர்க்கிறார்களோ?