Shadow

என்ன மரியாதை! என்ன மரியாதை?

இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே.. உண்மையாக என்னுடன் படித்த, நண்பன் பாபுவை புண்படுத்தும் நோக்கம் எதுவுமில்லை..

உலக நாயகனே இவரோட அழகை பார்த்து வாயை பொலந்து நிற்பார்.இவரு எதிர்ல நடந்து வந்தா அரவிந்த் சுவாமி கூட எங்கையாவது போய் மறைஞ்சி நின்னுபார்.

இப்படி இன்னும் நெறைய சொல்லிட்டே போகலாம்,அப்படி ஒரு அழகு நம்ம பாபுக்கு..

பாபுவுடன் இருக்கும் நண்பர்களும், அவனைவிட அறிவில் குறைந்து விளங்குவதால்,அவன் தான் உலக மகா புத்திசாலி என்ற ஒரு எண்ணம் உடல் முழுவதும் பரவி இருந்தது.

மற்றவர்கள் கருத்தை கேட்டு ஏற்பதில் எப்பொழுதும் உடன்பாடு இல்லை அவனுக்கு.

ஆகா மொத்தம் பாபு ஒரு காவிய படைப்பு.

இவ்வாறாக தன்னை தானே எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில், அலுவலக வேலை காரணமாக பாபுவை ஆந்திர மாநிலத்திற்கு அனுப்பி வைத்தார்கள், உடன் அவன் நண்பர்களுள் ஒருவனும் சென்றான்.

தெலுங்கான பிரச்சனை தலைவிரித்து ஆடிய நேரமது.

நம்ம ஹீரோ ஹைதராபாத் போய் லேன்ட் ஆனாரு…

ரயில் விட்டு இறங்கியதும், பேருந்து ஒன்றில் ஏறினான்.

அந்த பேருந்தில் நடத்துனராக இருந்த ஒரு பெண்மணி நம்ம ஹீரோவை பார்த்து

“பாபு டிக்கெட் தீசிகுன்னாவா
(தம்பி டிக்கெட் வாங்கிட்டியா)”
என்று கேட்டார்.

அட என் பேரு பாபுனு உங்களுக்கு எப்படி தெரியும் என்றான் ஆச்சர்யமாக.

பேருந்தில் சென்று கொண்டிருந்த போது, உடன் வந்தவன் பாபுவிடம்,

“தெலுங்கான தெலுங்கானானு சொல்றாங்களே அந்த பேரு எப்படி வந்துச்சி ??” என்று கேட்டான் பாபுவிடம்.

நமக்கு பதில் தெரியாட்டியும் தெரியாதுன்னு எப்போ உண்மைய சொல்லி இருக்கோம்??

“தெலுங்கு கானா பாட்டு எல்லாம் இங்க இருந்து தான் பரவ ஆரமிச்சிது அதனால தெலுங்கானானு வச்சிடாங்க” என்றான் பாபு.

அடுத்து பேருந்தை விட்டு இறங்கியவன்,ஹோட்டல் சென்று
அரை ஒன்றை புக் செய்துவிட்டு,உணவு உன்ன சென்றான்.

ஹோட்டலில் ஆர்டர் எடுக்க வந்தவர் இவனை பார்த்து,

“பாபு ஏண்டி தின்டாறு (தம்பி என்ன சாப்பிட வேணும்) “ என்றார்.

அட இவருக்கு கூட என் பேரு தெரிஞ்சி இருக்கே என்று ஆச்சர்யத்தில் மூழ்கி போனான் பாபு..

உடன் இருந்த எடுபுடி,உங்களுக்கு எங்க போனாலும் மரியாதை தான் போங்க, எல்லாருக்குமே உங்கள தெரிஞ்சி இருக்கு என்று சொல்ல பாபு முகத்தை பார்க்கணுமே,அடேங்கப்பா…

பிறகு வந்த வேலைய பார்க்கலாம்ன்னு முடிவு பண்ணி ஒரு டாக்ஸி புடிச்சி போயிட்டு இருந்தபோது, வழியில ஒரே கலவரம்..

கலவர காரன் ஒருத்தேன் பாபு போன கார வழி மறைச்சி எந்த ஊருடா நீ என்றான் தெலுகில்.

பாபுவுடன் வந்திருந்த நண்பன்

“நேனு ஹைதராபாத் (நான் ஹைதராபாத்)” என்று கூறிமுடிக்க,

” பாபு நுவ்வு ?? (தம்பி நீ ?? ) ” என்றார் பாபுவை பார்த்து..

உடனே நம்ம அறிவாளி பாபு,

“அட என் பேரு தெரிஞ்சி இருக்கு, ஆனா நான் தமிழ்நாடுனு மட்டும் தெரியாதா ?? “ என்றான் அவரிடம்..

ஏற்கனவே ஆந்திரா, தெலுங்கானானு கடுப்புல இருந்தவன், தமிழ்நாடு பேர கேட்டதும் வெறுத்துபோக அப்புறம் என்ன சொல்லவா வேணும்,

“என்ன மரியாதை..என்ன மரியாதை” …