Shadow

ஏழு நாட்கள் நட்பைப் பற்றிய ஒரு படம்

Romba Nallavanda Nee

ஆக்க்ஷன் படங்களை இயக்குவதில் வல்லவரான இயக்குநர் A. வெங்கடேஷ், ரொம்ப நல்லவன்டா நீ என்ற காமெடி த்ரில்லர் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நாயகனாக மிர்ச்சி செந்தில், கதாநாயகியாக சுருதி பாலா நடிக்கிறார்கள். முக்கியமான கதாப்பாத்திரத்தில் ரோபோ சங்கர் நடிக்க வில்லனாக எத்தன் புகழ் சர்வஜித் நடிக்கிறார். அங்காடி தெரு படத்தில் வில்லனாக மிரட்டிய வெங்கடேஷ் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

காமெடி த்ரில்லராக தயாராகி வரும் முக்கியமான கதாபாத்திரத்தில் ரோபோ சங்கர் நடிக்க வில்லனாக எத்தன் புகழ் ‘ சர்வஜித்’ நடிக்கிறார். பல வெற்றிப் படங்களை இயக்கியதோடு, ‘அங்காடி தெரு’ படத்தில் வில்லனாக மிரட்டிய வெங்கடேஷ் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்

“என் படங்களில் நகைச்சுவைக்கு முக்கிய இடம் உண்டு. எனினும் முழு நீள காமெடி படம் நான் இயக்கியதில்லை. இது எனக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது. முன்பின் அறியாத இரண்டு நபர்களின் ஏழு நாட்கள் நட்பு, அதன் தொடர்ச்சியாக ஏற்படும் சுவாரசியமான சம்பவங்களின் அடிப்படையில் அமைந்ததே ‘ரொம்ப நல்லவன்டா நீ’.

மனோகர் ஒளிப்பதிவில், ராம்சுரேந்தர் இசையமைப்பில், கனல் கண்ணனின் சண்டைப் பயிற்சியில், விஜய் படத்தொகுப்பில் இந்தப் படம் குறுகிய காலத்தில் வேகமாகப் படமாக்கப்பட்டது. 

எனது இயக்கத்தில் வெளிவந்த பெரும்பாலான படங்கள் வணிக ரீதியாக வெற்றிப் படங்களே! சமீபத்திய ட்ரெண்டான நகைச்சுவை, இந்த படம் எங்கும் நிறைந்தது இருக்கும்“ என்று கூறுகிறார் இயக்குநர் A. வெங்கடேஷ். ராண்டேவோ மூவி மேக்கர்ஸ் சார்பில் தீபக் குமார் நாயர் தயாரிக்கிறார்.