Shadow

5 வயது கின்னஸ் தமிழ் சிறுவன்

Guiness Dheeraj

ஐந்து வயதாகும் K.L.தீரஜ், கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளியில் யூ.கே.ஜி. படிக்கிறான். தேசிய அளவில் மூன்று ரெக்கார்ட்கள் முன்னமே படைத்து, India Book of Records இல் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தீரஜ் தனது முதல் ரெக்கார்ட்டை, பிறந்த இரண்டு வருட ஒன்பது மாதங்களில் படைத்துள்ளான். இளவயதில் அதிக எண்ணிக்கையில் அடையாளம் கண்டுகொண்டதுதான் அவனின் முதல் ரெக்கார்ட். 215 தேசிய கொடிகளை, 2 நிமிடம் 15 நொடிகளில் அடையாளம் கண்டுள்ளார்.

தீரஜ் தனது இரண்டாவது ரெக்கார்டை, மூன்று வருடம் ஏழு மாதங்கள் என அவன் வயதிருந்த பொழுது படைத்துள்ளான். படைப்புகளைப் பார்த்து அதைப் படைத்த படைப்பாளர்களின் பெயர்களை, ஒரு நிமிடத்திற்குள் அதிகளவில் சொல்லியுள்ளான். அதே தினத்தில் தனது மூன்றாவது ரெக்கார்டையும் படைத்துள்ளான்.

கின்னஸ் தீரஜ்தீரஜின் மூன்றாவது ரெக்கார்ட், உலக வரைப்படப் புதிரை மிக இளவயதில் விடுவித்துள்ளான்.

டாக்டர் பட்டம் பெற (Honorary Doctorate Degree) அனைத்துத் தகுதிகளும் உள்ளதென World Records University-யிடமிருந்து உறுதி கடிதம் கிடைத்துத்துள்ளது. செப்டம்பர் 29, 2014 அன்று டெல்லியில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் சான்றிதழ் பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. (யூ-ட்யூப்பில் தீரஜின் சாதனையைக் காண!)

கின்னஸ் உலக ரெக்கார்ட்டில் இடம் பெற, செப்டம்பர் 27 ஆம் தேதி ஒரு போட்டியை எதிர்கொண்டார். கூடவே, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்சும் அந்நிகழ்வில் இணைந்திருந்தது. ஒரு நிமிடத்தில் 77 தேசியக் கொடிகளை அடையாளம் காணப்பட்டதுதான் பழைய ரெக்கார்ட். தீரஜ், 110 தேசிய கொடிகளை ஒரு நிமிடத்திற்குள் அடையாளம் கண்டு அசத்தியுள்ளான். லயன்ஸ் கிளப் (Dist 324 A8) இந்நிகழ்விற்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.

தமிழன்டா!