Shadow

ஐ.டி. துறை பற்றிய இயக்குநர் ராமின் படம்

இயக்குநர் ராமின் தரமணி

கற்றது தமிழ், தங்க மீன்கள் என்று தரமான படங்கள் கொடுத்து தேசிய அளவில் மட்டுமல்ல, சர்வதேச அரங்கிலும் தமிழ்ப் படங்களுக்கு மிகப் பெரிய அந்தஸ்தை வாங்கித் தந்த இயக்குநர் ராம், பல்வேறு வெற்றிப் படங்களைத் தயாரித்து விநியோகித்து தரமான படங்கள் தயாரிக்கும் நிறுவனம் என்று தன் பட நிறுவனமான ஜே.எஸ்.கே பிலிம் corporation நிறுவனத்துக்கு பெயர் ஈட்டித் தந்த ஜே .சதீஷ் குமாருடன் இணைந்து தமிழ் ரசிகர்களுக்கு அடுத்துக் கொடுக்கவிருக்கும் படைப்பு ‘தரமணி’.

தரமான வித்தியாசமான கதைக் களம், நேர்த்தியான திரைக்கதை, தெளிவான படப்பிடிப்பு என்று தனக்கென்று தனிப் பாணியைக் கையாளும் ராம் இந்தப் படத்திலும் அவரது ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்றுகிறார். தரமணியின் ஆத்மா- The soul of Taramani என்று துவங்கும் ஒரு சிங்கிள் ட்ராக் ரசிகர்களிடம் ஏற்கெனவே மிகப் பிரபலமானது.

யுவன் ஷங்கர் ராஜா, இயக்குநர் ராம், ஜே.சதீஷ் குமார் கூட்டணி ரசிகர்களுக்கு ‘காலத்தால் அழியாத பாடல்களை அளித்தக் கூட்டணி என்பது குறிப்பிடத் தக்கது. அறிமுக நாயகன் வசந்த் ரவி கதா நாயகனாக அறிமுகமாக, ஆண்ட்ரியா ஜெரிமயா கதாநாயகியாக நடிக்கிறார். அவருக்கு இணையாகப் போட்டி போட்டு ஈடு கொடுக்கும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அஞ்சலி. இவர்களது நடிப்புப் போட்டி படத்தில் மிகவும் பேசப்படும் அம்சமாக இருக்குமென எதிர்ப்பார்க்கப் படுகிறது. இன்றைய சமுதாயத்தின் முக்கிய அங்கமான ஐ. டி. துறையைப் பற்றிய படம் என்பதால் இந்தப் படம் இளைஞர்களை வெகுவாகக் கவருமென எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் டீசர் மே 21 ஆம் தேதி வெளியாகிறது.