இந்திய நாட்டில், இருசக்கர வாகனம் தயாரிக்கும் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி திரு.ராஜசேகர்.
வழக்கம் போல் தனது இல்லத்திலிருந்து அலுவலகத்திற்கு தனது காரில் சென்றுகொண்டிருந்தவர்,வழியில் தனது நிறுவனத்தை சேர்ந்த ஒரு இருசக்கர வாகனத்தின் விளம்பர பலகையை பார்த்தார்.
பார்த்ததும்,அவர் முகத்தில் மகிழ்ச்சி பரவியது. மக்களை கவரும் வண்ணம் அந்த விளம்பர பலகை அமைந்ததே அதற்கான காரணம்.
இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அலுவலகம் செல்லும்பொழுது,அந்த இடத்தில் அதே வாகனத்திற்கு வேறு ஒரு வித்யாசமான விளம்பர பலகையை கண்டார்.
அது அவர் முன்பு கண்டதைவிட மிகவும் பிரமாதமாக அமைந்திருந்தது. அவர் முகத்தில் வழக்கத்தை மீறிய ஒரு சந்தோசம்.
மீண்டும் 3 நாட்கள் கழித்து அவ்வழியில் சென்றபொழுது அதே வாகனத்திற்கான வேறு ஒரு விளம்பர பலகையை கண்டார்.
அதை கண்டவர், ஒரே வாரத்தில் மூன்று விதாயசமான வகையில் விளம்பர பலகையை தயாரித்த ஊழியர்களுக்கு தனது நன்றியையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்ள எண்ணினார்.
அன்று அலுவலகத்தில், தனது விளம்பர குழுவின் ஊழியர்களை அவரது அறைக்கு அழைத்தார்.
ஏன் எதற்கு என்று புரியாமல் அனைவரும் குழப்பத்தில் நிற்க, ராஜசேகர் அவர்கள் யார் இந்த விளம்பர பலகைக்கான வித விதமான ஐடியா கொடுத்தது. எதனை பேரு இந்த விளம்பர பலகைக்கான வேளையில் இருந்தீர்கள் என்று கேட்டார்.
குழப்பத்தில் இருந்தவர்களுக்கு மேலும் குழப்பமே உண்டானது.
ஐயா எந்த விளம்பர பலகை பத்தி கேட்குறீங்க என்று மேனேஜர் கேட்க, மவுண்ட் ரோடு ல இருக்கே அத தான் சொன்னேன் என்றார் ராஜசேகர்.
அப்படி எதுவும் பலகை நாம அங்க வைகலையே என்றார் மேனேஜர்.
சிரித்துகொண்டே ராஜசேகர்,
யோவ் உன்ன பொய் என் மேனேஜரா வச்சி இருக்கேன் பாரு, தினமும் அந்த வழியா வரேன், எனக்கு தெரியாத என்றார் அவர்.
ஐயோ சார் உண்மையா சொல்றேன் நம்ம ஆளுங்க வைக்கல அந்த பலகையை என்று கூறியதும் ராஜசேகர் குழப்பத்தின் உச்சிக்கு சென்றார்.
சரி அப்படி என்றால் அத அந்த எடத்துல வச்சது யார்னு எனக்கு கண்டுபிடிச்சி சொல்லுங்க என்றார்.
எப்படியோ கண்டு பிடிச்சி ரவி என்ற ஒருவன் தான் இந்த வேலைய பண்ணி இருக்கான் சார் என்று மேனேஜர் ராஜசேகரிடம் கூறினார்.
உடனே அவர், நான் அவனை பார்க்கணும், அவன கொஞ்சம் வர சொல்லுங்க ஆபீஸ்கு என்றார்.
அன்று மாலை 4 மணிக்கு ரவி அவர் அறைக்கு வந்தான்..
வாபா உட்கார் என்றார் ராஜசேகர்.
அவரது அழைப்பு வரும் என்று ஏற்கனவே எதிர்பார்த்தது போல மிடுக்குடன் இருந்தான் ரவி.
நீ யார் ? என் கம்பெனி தயாரித்த வாகனத்திற்கு நீ ஏன் விளம்பர பலகை தயாரித்து நகரத்தின் முக்கியமான எடத்துல வைக்கணும் ? என்று கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு தயாராக பதில் வைத்திருந்த ரவி,
சார் ஒரு மாசதிருக்கு முன்பு உங்க கம்பெனில விளம்பர குழுவிக்கு (advertisement team) ஆள் வேணும்னு சொல்லி இருந்தாங்க.
MBA முடிச்ச நானும் அதற்காக அப்லை பண்ணினேன்.
ஆனால் முன்அனுபவம் இல்லாத ஒரே காரணத்தினால எனக்கு வேலை இல்லன்னு சொல்லி அனுபிடாங்க.
முன் அனுபவம் முக்கியமில்லை… திறமையும்,உழைப்பும் தான் முக்கியம்..
என்னோட திறமையை நிருபிக்க தான் இந்த முயற்சியில் இறங்கினேன் என்று அவன் சொல்ல,இனி உன்னோட முதல் வீடு இது தான், காலையில மறக்காம வந்துடு என்று கூறி அனுப்பினார் ராஜசேகர் ..