Shadow

ஒ காதல் கண்மணி – பரிசோதனை முயற்சி

ஒ காதல் கண்மணி

மேற்கத்திய இசை, ஹிந்துஸ்தானி இசை தெரிந்த அளவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தமிழிசையும் தெரிந்தவர் எனப் பாராட்டிய வைரமுத்து, “ஓ காதல் கண்மணி படத்தில் நான் ஐந்து பாடல்களை எழுதியுள்ளேன். ‘மென்ட்டல் மனதில்’ பாடலை ஏ.ஆர்.ரஹ்மானும் மணிரத்னமும் எழுதியுள்ளனர். அன்று நான் வெளியூர் சென்றுவிட்டேன். அதனால் இரண்டு கவிஞர்கள் உருவாகிவிட்டனர். இந்தப் பாடலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார் மணிரத்னம். ‘நான் இனி வெளியூர்க்குப் போகக் கூடாது’ எனச் சொன்னேன்” என்றார்.

மேலும், “மணிரத்னம் 24 படங்கள்தான் இயக்கியுள்ளார். எண்ணிக்கை அளவில் அது குறைவும். ஆனால் தர அளவில் அது அதிகம். இன்னும் சில ஆண்டுகளில் கல்யாணம் எனும் சடங்கு நிலவுமா என்பது சந்தேகமே! மணிரத்னம் இப்படத்தில் அதைப் பற்றித்தான் விவாதித்துள்ளார். இப்படத்தின் கதை மணிரத்னத்தின் பரிசோதனை முயற்சி” என்றார் வைரமுத்து.

“சில கனவுகளில் வாழ்ந்துடலாம் போல் தோணும். அப்படித்தான் இருந்தது இந்தப் படத்தின் படப்பிடிப்பு. ஒரு யுனிவர்சிட்டி போனதுபோல் நிறைய படிக்க முடிஞ்சது” என மலையாள நெடியில்லாத தமிழில் பேசுகிறார் துல்கர் சல்மான்.

மணிரத்னத்தின் பார்வையில் லிவிங் டுகெதர் சரியா தவறா எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “என் ஃப்ளாட்ஃபார்ம் சினிமா. நான் அங்க என் கருத்துகளைப் பதிந்திருக்கேன்” என்றார்.

ஆஹா.. கலாச்சாரம் அது இது என எவரும் கிளம்பாமல் இருக்கணும்.!